பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/988

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - தெண்சேரிகிரி திருப்புகழ் உரை 515 அலங்கார உருவினராம் திருமாலின் மருகனே! தாமரையான் (பிரமனும்) மயங்கி அச்சமுறப் போய் முறையிட்டு நின்ற தேவர்களுடைய சிறைநீங்கச் செண்டாடி அசுரர்களை ஒன்றாக (ஒன்றாக அசுரர்களைச்) செண்டாடி (எல்லா அசுரர்களையும் சிதற அடித்து), (அல்லது - சிதற அடித்து) - ஒன்றாக அடியர் தொழு (அடியர் ஒன்றாகத் தொழு அடியர் ஒன்றுகூடித் தொழுகின்ற அல்லது ஒருத்தனாம் வகை வேண்டி அடியார் தொழுகின்ற) பெருமாளே! தென்சேரிகிரியில் எழுந்தருளியுள்ள பெருமாளே! (உன தருளை அருள்வாயே). 397 சிறப்பித்துப் பேசி, கொஞ்சிப் பயிலும் பேச்சுக்களைக் கொண்டு, தாம் சந்தித்துப் பார்ப்பவர்களின் உள்ளத்தை, வெட்டி அழிப்பது போன்ற விழிகொண்டும், பூங்கொத்துக்கள் நிரம்பப் புகுத்தியுள்ள கூந்தல் கொண்டும்-வடமேரு மலைக்கு நிகரான கொங்கை கொண்டும், நின்று சபாமண்டபத்தில் கொலு வீற்றிருப்பது போன்ற நிலை கொண்டும், கொம்புபோல இளைத்துப்போன இடை கொண்டும் - பலருடனும் பழைமை விளங்க வசப்படுத்துபவராம் பொது மகளிரின் வாய்விட்டுக் கூவுகின்ற மயில்போன்ற நடிப்பால் எனது இட்டம் அவர்பாற் செல்லுகின்ற மயக்கமது நீங்கும்படி பழைமை வாய்ந்த சொற்களால் அமைந்த பழைய வேத மொழியைக் கொண்டு, தருக்கவா தங்களுக்கு இடமில்லாதபடி தெளிவாக, உமையைப் பங்கிற்கொண்ட சிவபிரானுக்கு அன்று உபதேசித்த பொருளை (எனக்கு) அருள்புரிவாயாக.