பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1002

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிக்கல்) திருப்புகழ் உரை (831) 443 பொருந்திய படத்தை உடைய பாம்பினுடைய பெரிய விஷம் என்று சொல்லும்படி வேலாயுதத்தைச்) செலுத்தி முடுகி எதிர்வந்த சூரனை அவனது மற்போற் செய்யும் கரடு முரடான மார்பு பிளக்கவும்.தக்கவகையில். அவனது தலையைப் பற்றி அறுத்த கூர்மை கொண்ட மின்போல ஒளிரும் பராக்ரமம் வாய்ந்த வேலாயுதத்தை உடையவனே! செம்மை வாய்ந்த அழகிய தினைப்புனமுள்ள (வள்ளி) மலையில் இருந்த மான்போன்ற வள்ளியை அணைந்த அழகிய மார்பனே! செம்மை வாய்ந்த மனத்துப் பெரியோர்கள், பெருந்தவம் மிக்கவர், ஆகிய இவர் தம் நல்ல எண்ணம் கொண்ட உள்ளத்திலே விளங்கி நிற்கும் செல்வனே! சிக்கல் என்னும் நகரிலே வீற்றிருக்கும் பெருமாளே! (அல்லது, உள்ளத்திலே விளங்கி நிற்கும் பெருமாளே! செல்வம் நிறைந்த சிக்கல்...மேவிய பெருமாளே!) (அருள் தாராப்). 831. புலவர்களை ஆதரித்து ரகூதிக்கும் கற்புக விருகூடிமே! இனிம்ை மிக்க குணம் கொண்ட மலைக்கு நிகரான மாதர் கொங்கையில் திளைக்கும் புயத்தவனே! திச்ை எட்டிலும் போய் உலாவுகின்ற புக ழாளனே! ஒப்புவமை அற்ற நட்புத்தன்மை கூடிய சத்திய நிலையில் உலகிலே உனக்கு ஒப்பாவார் ஒருவர் உளரோ என்று நல்ல பொருட் சொற்கள்ை வரிசையாக் வைத்துச் செவ்விய முறையில் அமைந்துள்ள பாடல்களைப் பாடி விலைமதிப்பைத் கடந்த தமிழ்ச்சொல்லை-ஆதரிப்பதற்கு உனைப்போல (உதாரிகள்) சிறந்த கொடையாளிகள் யார்தான் உள்ளார்கள் என்று நிரம்பக் (கொண்டாடி)ப் புகழ்ந்து (தமது) வாழ்வே பெரிது என்னும் ఫీడ్బ్యా; உணர்ச்சி கொண்டுள்ள (லுத்தர்க்கு) லோபிகளிடம் என் (பாடு) வருத்தங்களைப் போய் முறையிடும் (வறுமை) தரித்திர நிலை நீங்க். மிக்க அருமைப்பாடுடனே-பிரயாசையுடனே உனது பாத தாமரைகளைப் புகலிடம் எனப் பற்றியுள்ள பேதையாகிய என்மீது நீ திருக்க்ண் அருள் வைத்துக் குறைவிலா வாழ்வை (பேரின்பவாழ்வை)த் தந்தருளுக.