பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1010

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகபட்டினம்) திருப்புகழ் உரை 451 ஞான மங்கை, அமுத உருவினள், எனது ஒப்பற்ற தாய், தெய்வப்பெண் ஆகிய குறப்பெண்ணை (வள்ளியை) மணந்த திருப்புயத்தை உடையவனே நாகபட்டினத்தில் அமர்ந்து விளங்கும் (நம்பர்) சிவன் புகழும் தம்பிரானே (அல்லது அமர்ந்து விளங்கும் தம்பிரானே' (நம்பர்) சிவபிரான் புகழும் தம்பிரானே! (கழல் மறந்திடேனே) 834. விழுகின்ற (தாது) சுக்கிலம் என்று (கருதாது உடலை உடல்ைக் கருதாமல், வினையின் சேர்க்கையே - வினை பெருகுதலையே விரும்புவதாய். வீணாக (உலகாயதம்) - போகமே மோகூம் என்னும் புத்திமேலிட்டதனால் மாதர்களின் மயல் காரணத்தால். (அழுது ஆகெடவே)-(நான்) அழுதும் ஐயோ கெட்டுப்போயும் (அவமாகிட) வீணாக (நாள் அடைவே) என் வாழ்நாள் முழுமையும் (கழியாது) கழிந்து போகாமல் உன்னைப் புகழ்ந்து துதித்து மலருற்ற உன் திருவடியே அடியேனுக்கு உற்ற உறவாகக் கூட்டிவைக்கும் ஒப்பற்றதும் அழியாததுமான வரத்தைத் தந்தருளுக தொழுகின்ற அடியார்களுடைய வினையின் வேர் அடியோடு அற்றுப்போகக் குற்றமற்ற மேலாம்பதவியையே தருகின்றதேவனே! தேவர்களுக்கு அரசே கருணைக்கு இருப்பிடமானவனே! (சுகிர்தா) புண்ணியனே அடியார்களுடைய பெருவாழ்வே (எழுதாமறை வேதத்தின் சிறந்த முடிவுப்பொருளே! கூரியவேலை ஏந்தும் இறைவனே! என்னை ஆட்கொண்டுள்ளவனே! (ஆளாக உடையவனே) இறைவனே (ஏதுதா அதுதா) நீ எதைக் கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்றாயோ அதைக் கொடுத்தருளுக (எனக்கு என்று ஒரு விருப்பம் வேண்டாம்); (தனையே இணை) தனக்குத்தானே (இணையான) நிகரான நாகபட்டினத்தில் வாழ்கின்ற பெருமாளே! (அழியாவரமே தருவாயே) "எழுதாச் சுருதி எழுதுஞ் சுருதி செழுமாத் திருச்செவியுட்சேர்த்தி" பூவணநாதருலா 61. எழுதா மறையும் எழுதும் மறையும் வழுவாது கேட்டு மகிழ்ந்து - திருவிடை மருதூருலா 197 O வேண்டத் தக்க தறிவோய் நீ" - திருவாச குழைத்த-6. (* தொடர்ச்சி 452ஆம் பக்கம் பார்க்க. )