பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1024

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடவாயில் திருப்புகழ் உரை 465 குயில்கள் கூவுகின்ற சோலைகள் சூழ்ந்துள்ள குடவாயில் என்னும் நகரில் உறைபவனே! (குறமாது) வள்ளியை அணைந்த (ச துரனே) சாமர்த்தியசாலியே! ஞான மூர்த்தியே! குறைவுபடாத உண்மைத் தவ. நிலையை உடையார் தம் பெருமாளே! (பதம் அருள்வாயே) 841. வேதமாய், (இயலாய்) ஆகமமாய் (அல்லது - இயற்றமி. ழாய்), அத்தகைய (ஆகமங்களின்) - இயற்றமிழின் - மிக்குள்ள தான பகுதியாய் பலவுமாய் - அநேகம் (பாஷைகளில்) மொழிகளில் கொள்ளப்பட்ட சம்பந்தத்தை உடையதாய், அடிப்படையாய், நடுவாய், மிக்க துணையாய்ப் பின்னும், (துறவுமாய்) எல்லாவற்றையும் விட்ட நிலையதாய், தருமமாய், நல்லொழுக்க வழியாய், மிகுந்த விரிவு உடையதாய், விளைவுப் பொருளாய், அருள் நிரம்பிய ஞானிகள் அனுபவிக்கும் சுகப் பொருளாய், மேகமாய், மழையாய், ஏழுவகைச் சுடர்களைக் கிரணங்களை வீசும் (அல்லது எழுகின்ற ஒளியை வீசுகின்ற) - அல்லது உதயமாம் ஒளியை வீசும். சூரிய மூர்த்தியாய், சந்திரனாய், நிறைந்துள்ள நகூடித்திரங்கள் பலவுமாய், ஆகாய வெளியாய், சோதியாய், உண்டாகின்ற பகலும், இரவும் இல்லாததாய், நிலைத்துள்ளதாய் உள்ள, மிக்க மேலான பொருளான மகா மாயையின் (நேர்மையை) உண்மைத் தத்துவத்தை உண்மை நிலையை, எவரும் அறிய முடியாததை, நீ குருவாக வந்து அதை இங்ங்னம் (உலகுக்கு) எடுத்து ஒதுமாறு (எனக்குத்) திருவருள் புரிந்தாய்! இந்த பாக்கியம் யான் முற்பிறப்புகளிற் செய்த தவத்தின் பயன்தானோ!