பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1035

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • 845 - 1துதி தானதனத் தான தந்த தானதனத் தான தந்த

தானதனத் தான தந்த தனதான காதலுடைத் தாகி யன்று ஆரணியத் தேந டந்து கானவர்பொற் பாவை கொங்கை அணைவோனே! கோதில்தமிழ்க் காணtகும்ப மாமுனிவற் காம ணஞ்செய் கோலமளித் தாளு+மும்பர்.......... X முருகோணே! Oகோகனகத் தான்வ ணங்கி.......... கோடிமறைக் காட மர்ந்த பெருமாளே! (1.) கோடி (குழகர் கோயில்) (இது வேதாரணியம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அடுத்த அகத்தியான் பள்ளி ஸ்டேஷனுக்குத் தெற்கு 5 மைல். சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது.)

  • முழுப்பாடல் கிட்டாமல் ஒரு பகுதியே கிடைத்துள்ளது. வாக்கு அருமையாயுள்ளது. படித்து மகிழத்தக்கது. ஆதலின் இங்கு இப் பகுதி வெளியாகின்றது.

t இப் பகுதியில் வேதாரணியத்திற் சிவபிரான் அகத்தியர்க்குத் திருமணக்கோல தரிசனந் தந்த சரிதம் விளக்கப்பட்டுள்ளது. சிவபிரான்-பார்வதி.இவர்தம் திருமணத் கோலத்தைக் காண முநிவர் தேவராதியோர் இமயமலையிற் கூடிய காரணத்தால் வடபால் தாழத் தென்பால் உயர்ந்திட்டது. பூவுலகைச் சமன் செய்யச் சிவன் அகத்தியரைத் தென்திசைக் கேகுக - வையம் நிலைபெறும் என்றார். அகத்தியர் ஐயனே! உனது மணவாளக் கோலத்தைக் காணாது எங்ங்ணம் ஏகுவேன்' எனச் சிவபிரான் நீ செல்லுக நீ இருக்கும் இடத்துக்கு வந்து நாம் மணவாளக் கோலம் காட்டுவோம்' என்றார். அங்ங்னமே அகத்தியர் செல்ல, அகத்தியர்க்குச் சிவபிரான் வேதாரணியத்தில் தனது மணவாளக் கோலத்தைக் காட்டினர். என்பது புராண வரலாறு. (தொடர்ச்சி-பக்கம் 477 பார்க்க)