பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1036

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாரணியம்) திருப்புகழ் உரை 477 845 - 1. அன்பு பூண்டவனாகி - முன்பொருகாலத்தில் (வள்ளிமலைக்) காடுகளிலே நடந்து, வேடர்கள் பெற்ற அழகிய நங்கை வள்ளியின் கொங்கையை அணைந்தவனே! குற்றமில்லாத தமிழில் விருப்பம் நிறைந்த அகத்திய முநிவருக்காகத் தனது திருமணக் கோலக்காட்சியைத் தந்து அவரை ஆட்கொண்ட சிவபிரானது குழந்தையே! பிரமன் வணங்கி........................ கோடி என்னும் தலத்திற் கடுத்த வேதாரணியத்தில் அமர்ந்த பெருமாளே! "சிந்தைய தழுங்க லின்றித் தென்மலைச் சேறி அங்கண் வந்துநம் வதுவைக் காட்சி வழங்குதும் மகிழ்ந்து காண்டி" கந்தபுராணம் 1-10.59. "என்னையோர் பொருளாய் வந்திங் கியன்மண வாளக் கோலந் தன்னையின் றெனக் களித்த தானுவே போற்றி திங்கள் மன்னுசெஞ் சடையாய் போற்றி மறைதொழு மணாளா போற்றி நன்னுதல் பாகா போற்றி நாதனே போற்றி யென்று தாளில் வீழ கும்ப மீன்றோன் தனையுகந் தெடுத்து நாதன் வேதாரணிய புராணம் (பரஞ்சோதி) மணவாள-63-1. 4 உம்பர் . தேவராகிய சிவபிரான். X முருகோனே - குழந்தையே! இப் பொருளில் இச் சொல்லை அரு ணகிரியார் ஆள்வது வழக்கம். பாடல் 93, பக்கம் 98 கீழ்க்குறிப்பைப் பார்க்க O கோகனத்தான் - பிரமன். பிரமன் பூசித்தது. தான் படைத்த அழகி திலோத்தமையைக் கூடினதால் பிரமன் படைக்கும் ஆற்றலை இழந்தான்: வேதாரணியத்தில் சிவபிரானைப் பூசித்து அந்தத் தோஷம் நீங்கிப் படைக்கும் ஆற்றலையும் பிரமன் பெற்றான். "பெற்ற நன்மகள் தன் சாயற் பெருநலன் நுகர்ந்த வாற்றால் அற்றறி வடங்கி மூட மாகியே அவலங் கூர்ந்து மற்றறிதற் கென்கொல் சாந்தி என அவன் மதித்து முன்னும் கற்றவன் சிருட்டி வேத வனத்தெனக் கருத்திற் கொண்டான். அரன்பாதம் போற்றித் துனியுறு தீமைநீங்கித் தோற்றமார் தொழிலும் மேவி, இனிதென இருக்கை மேவி இன்பமுற் றமர்ந்தா னன்றே" வேதாரணிய புராணம் - அகோரதேவர்-பிரமதிர்த்த-12, 17