பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 97 மாணிக்கம் (ஆதிய நவரத்னங்கள்) நிறைந்த விண்ணுலகத்தில் இருந்த ஒப்பற்றகிளியாம் தேவசேனைக்கு (அல்லது மாணிக்கம் ஆதிய நவரத்னங்களை அணிந்த தத்தை தேவசேனைக்கு) இனியவனே. சேவற்கொடியை அழகிய கையிற் கொண்ட வீரனே! கச்சிப் பதியில் இருப்பவனே! தேவர்கள் வாழும் விண்ணுலகத்துக்குச் சக்கரவர்த்தியாம் பெருமாளே! (பாடப் பத்திச் சித்தம் எனக்குத் தரவேணும்) 485. சீசி என இகழ்ந்து ஒதுக்க வேண்டிய (முப்புரம்போல (ஊறு செய்யும்) மும்மலங்கள் என்கின்ற காடு (வெந்து) சாம்பலாகும் படி, அந்தக் காட்டைத் துகைத்து ஒழித் தெரிந்து, உறக்கம் கோசங்கள் - ஆன்மாவை மூடிக்கொண்டிருக்கிற (உறைகள் முடிகள்), இவை அடியோடு ஒழிய சிவன் முத்தி நிலையை (ஆன்மா இம்மையிலேயே முத்தியடையும் நிலையை) நான் கூடுதற்கு மகிழ்ச்சியுற்று அனுபவ ஞான நிலையைச் சேர்தற்கு x அற்புதத் தோற்றம் இது என்றும் கூறும்படி சூரியமண்டலம் (போன்ற) - பெருஞ் சோதியைக் கண்டு களிப்பதற்குரிய ஒழுக்க நிலையை அடைந்து (உனது) திருவருளை உணர்ந்திருக்க அறியாமல். (96 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) Xஅற்புதக் கோல. சூரிய புவிஇடைகலை பிங்கலை எனப்படும் இரண்டு வழியினையும் மாற்றி, மூலமாம் ஒரு வழியைத் திறந்தால், அங்கே பொருந்திய கோடி சூரியர்களைப் போன்ற பெருஞ்சோதியைத் தரிசிக்கலாம் இருவழி யடைத்து மூலத் தொருவழி திறந்து ஆங்கு எய்தும் பருதியோர் கோடி ஒத்த சோதியும் பார்த்து, நாதம் ஒருபதும் கேட்டு மும்மைக் குணம்புலத் துடனடக்கிப் புருவமேல் நாட்டம் ஒட்டி ஆனந்தப் புணரி புக்கான்" -திருக்கழுக்குன்றப் புராணம் நந்திதனம்-24