பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1046

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறை) திருப்புகழ் உரை 487 புகழ் மிகுந்த பெரிய (கடவுளர்) தேவர்கள் மகிழும்படி, பூமியைத் தாங்கும் மந்தரகிரியைக் கடலிடையே. (மத்தாகச்) சுழலச் செய்த மேகநிறத்துத் திருமாலும், ஒரு (மாசு) குறையைப் பெற்ற (தனக்கிருந்த ஐந்து தலையில் ஒரு தலைய்ை இழந்த குறையைப் பெற்ற) நான்கு முகங்களிலும் பார்வைகொண்ட எட்டுக் கண்ணனாம் பிரமன் முதலான தேவர்கள் தமது பாதத்தை விரும்பிப் போற்ற திருக் குருந்த மரத்து அடியில் வீற்றிருந்தருளின குருமூர்த்தியாம் சங்கரருடனே திருப்பெருந்துறை என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! o (கருக்....கடலது கடக்கத்...திருவுளம் இனியாமோ) 849. ஒலிசெயும் வண்டுகள் (மலர் மணத்தேனை மோந்து உண்ண்வந்த வண்டுகள்) எழுந்து மொய்க்கும் கரிய கூந்தல் அலைச்சல் உறவும், பெரு விஷத்தை உமிழ்கின்ற வேல்போன்ற கண்கள் குவியவும், அரும்பி மலரும் பிறைச் சந்திரனை ஒத்த நெற்றியில் வெயர்வு எழவும், இதழ் ஊறலாம் அமுது ஊறுகின்ற நறுமணம் தங்கும் செவ்விய பவளம்போன்ற வாயிதழ் தெரியவும், பொருந்திய சங்குபோன்ற கண்டம் (கழுத்திலிருந்து) வெளிப்படும் புட்குரல் ஒலியுடன் பதட்டம் உறவும், முழு அன்பையும் தந்து படுக்கையிற் காட்டின காமப்பற்றுக் கிடமானதும், (சிகரம்) மலை போன்றதும், குடம் போன்றதும், குங்குமம் பூசியுள்ளதும், புளகாங்கிதம் கொண்டதுமான கொங்கைகள் இரண்டு புயங்களிலும் அழுந்திட மத்தியிலே வெளியிடம் தெரியாத வ்ண்ணம், ஒருவ்ரை ஒருவர் இறுக அணைந்திட உயிரும் உயிரும் கலந்து பொருந்தக் கூடி இருண்ட இரவில் (இன்பு உதவிடும்) கலவி இன்பத்தைத் தந்து உதவும் (அவசர நினைவு) சமயங்களின் ஞாபகம் நெஞ்சிலிருந்து ஒழிந்துபோக, (அம் மாதர்களின்) முக தரிசனத்தைச் செய்ய விரும்பும் அன்பு ஒழிந்துபோக, இனி எனக்கு அருள்புரிவாயாக,