பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1068

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பந்தணைநல்லுர்) திருப்புகழ் உரை 509 H விண்ணி லுள்ள (விஞ்சையர்) வித்தியாதரர் கோ (எனவே) கோவென்று அலறி இரங்க, குவடு) கிரவுஞ்சமும் எழுகிரியும், அவுணர்களும் அழியுமாறும், கடலும், தீவுகளும் (கமற) மிக வேகுதல் உறக் கொடிய நெருப்பை வீசும் வேலாயுதத்தைச் செலுத்தின பராக்ரம சாலியே! முருகனே! யானை, பெரிய புலி இவைகளின் தோலைப் புனைந்தவர், என்னை அடிமையாகக் கொண்ட சுவாமி சதாசிவ மூர்த்தி, கடவுள், என் தந்தை, ஆகிய சிவபிரானது (இடது)பாகத்தை விட்டுப் பிரியாத உமாதேவி அருளிய குழந்தையே! உலகம், அண்டங்கள் இவை முழுதிலும் ஒரு உருவாய் நிறைந்து விளங்கும் பெரிய அழகிய மேக நிறத்து மேனியராம் அரி, லகூழ்மி வாசம் செய்கின்ற மார்பை உடையவர் . ஆகிய திருமாலின் மருகனே! தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளி நாயகியின் வளர்ச்சி மிகும் கொங்கையிற் படிந்த அழுந்திய மார்பழகனே! மிகுந்த (திலகம்) சிறப்பு வாய்ந்த பந்தணைநல்லூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (கழலார் கழல் அருள்வாயே) 857. குடத்தை ஒத்த கொங்கையை வளர்த்துள்ளவர்களும், கொஞ்சுகின்ற கிளி போன்ற பேச்சினை உடையவர்களும் ஆன மான் அனைய மாதர்கள் குங்குமம் ஆதிய அலங்காரத்துடன் (அல்லது குங்கும பரணிக்குள் இருந்த) நல்ல புனுகை விட்டு வாரப்பட்ட (கொந்தளகம்) (கொந்து) பூங்கொத்துக்கள் உள்ள (அளகம்) கூந்தலை உடைய மாதர்கள். இவர்களிடத்தே. விண் செயல்களைச் செய்து நட்புச் செயல்களைக் காட்டி அழிந்து நரகில் மெலியாதவாறு (நலிவு உறாதவாறு)