பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 486. அகப்பொருள் (அஞ்சல் என்று கூற) தத்ததன தந்த தத்ததன தந்த தத்ததன தந்த தனதான *நச்சரவ மென்று நச்சரவ மென்று நச்சுமிழ் களங்க மதியாலும் நத்தொடு முழங்க ணத்தொடு முழங்கு t நத்திரை வழங்கு கடலாலும், இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த இச்சிறுமி நொந்து மெலியாதே; எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி இத்தனையி லஞ்ச லெனவேனும் பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை பச்சைமலை யெங்கு முறைவோனே. பத்தியுட னின்று பத்திசெயு மன்பர் பத்திரம ணிந்த கழலோனே:

  1. கச்சிவர் குரும்பை X கச்சவர் விரும்பு

கச்சியில மர்ந்த கதிர்வேலா. கற்பக வனங்கொள் கற்பக விசும்பர் கைத்தளை களைந்த பெருமாளே (36)

  • இந்த 486 ஆம் பாடலில் அடிதோறும் விளங்கும் வழி எதுகை கவனிக்கற்பாலது:

சந்திரனும் கடலொலியும் விரகவேதனை தருவன பாடல் 218 பக்கம் 53 பார்க்க 1. நத் திரைவிசேஷ திரை. # அரவகல் அல்குலார் பால் ஆசைநீத் தவர்க்கே வீடு தருவம் என் றளவில் வேதம் சாற்றிய தலைவன்" (திருவிளையாடல்-சுந்தரர் துதி) Xகச்சவர்-வெறுத்தவர்.