பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1070

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பந்தணைநல்லுர்) திருப்புகழ் உரை 511 வளப்பமுள்ள கயிலைமலையைச் சுற்றி வந்த திருவடியை (வந்திக்கின்ற) வணங்கிப் போற்றி செய்கின்ற் புத்தியைத் தந்தருளுவாயாக. (பம்புநதி, பங்கு உற்ற ஒரு சமர்த்தி) (சடையிற்) செறிந்துள்ள கங்கை நதி (சிவனார்) பாகத்திற் பொருந்தியுள்ள ஒப்பற்ற சாமர்த்தியம் உள்ள பார்வதிதேவி இவர்கள் இருவரும் தத்தமது பழைமையுள்ள (நல்ல) தவப்பேற்றால் அருளின குழந்தையே! பசிய மேகங்கள் படியும் சோலைகள் மிக்குள்ள பந்தனை நல்லூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே! (சம்பு) (நாவல்மர) நிழலில் வந்து தோன்றிய சங்கரர்க்கும் (சிவனுக்கும்) தலைவனே! சங்கை ஏந்தின திருக்கரத்தர் (திருமாலும்), தேவர்களும் (சூராதியர்களிடம் கொண்ட) பயத்தினால் ஏற்பட்ட மனக்கவலையை - துன்பத்தை - நீக்கி ஒழித்த பெருமாளே! (வந்தனை செய் புத்தி தருவாயே) 858. கெண்டைமீன்கள் போன்ற கண்களையுடைய மாதர்கள், மலர் அணிந்த தமது கொண்டைகள் குலுங்க நின்று, சமீபத்திலிருந்து தாழ்ந்த குரலுடன் பற்கள் தெரியும்படி வேண்டிக் குழைந்து (இளகின மனமுடையவராய்ப் - படுக்கையிற் கொண்டுபோய், நல்ல. எழுந்து சாகையொடு தழைப்பத் தானோங்கி ஒகையுடன், நின் று பரவ நிருத்தன்_கருத்துடனே இன்று முதற் சம்புமுனி இப்படிப் ப்ோய் நளின முனி பூசித்த ஞான பூமிக்கண்.இருப்பாய் உன் நீழலிலே யாமுறைவோம் என்ன, விருப்பால் அவன் வந்து விட்டான்"

  • இப் பாடல் 17ஆம் பாடலின் சந்தத்தைக் கொண்ட து.