பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 101 486. நச்சு (விரும்பிப் பிடிக்க வந்த) - கேது என்னும் பாம்பு தன்னை மென்று ( வெளிவிட்ட காரணத்தால் தானும் , ဂ္ယီ விஷப் பாம்பு என்றே சொல்லும்படி, நச்சு விஷத்தை (உமிழ்) (என்மீது) கக்குகின்ற (களங்கத்தை) கறையைக் கொண்ட நிலவாலும். (நத்தொடு) சங்கினுடன் (முழங்கு)பேரொலி செய்கின்ற கடலாலும்), (கனத்தொடு) மேகத்துடன் முழங்குகின்ற (கடலாலும்), (அல்லது சங்கின் ஒலியுடன் மேகத்தின் (இடியின்) ஒலியும் கலந்ததுபோலப் பேரொலி எழுப்பி முழங்கும்)விசேஷ அலைகளை வீசும் கடலாலும். பத்தித் தொண்டு, தெளிவு இரண்டும் இல்லாமல் ஆசைப்படுகின்றேன் எனக்கூறிவந்த இந்தச் சிறுபெண் நொந்து மெலியாமல். எவ்வளவோ நெஞ்சிலே (எத்தனங்களை) முயற்சிகளை (முயங்கி) மேற்கொண்டு செய்பவளாகிய (?) இந்த அளவிலே (இப்பொழுதே) அஞ்சல் என்று கூறி அருள் செய்ய வேண்டுகின்றேன். பச்சை மயிலை (வாகனமாகக் கொண்டு) பச்சை நிறங்கொண்ட வேடப் பெண் (வள்ளி) வாழ்ந்த பசுமை வாய்ந்த மலை (வள்ளிமலையின்) எவ்விடத்தும் உறைபவனே! (அல்லது) மறமங்கையுடன் பசுமை வாய்ந்த மலையிடங்களில் எல்லாம் (எங்கும் உள்ள மலைகளிலும்) உன்றபவனே! பத்தியுடனே (நிலைத்து) நின்று (அல்லது முறைமை ஒழுங்குதவற்ாமல் நின்று) பக்தி செய்கின்ற'அன்பர் பூசிக்கும் பத்திரங்களை (இலைகளை, பூ இதழ்களை) அணிந்து கொள்கின்ற திருவடியை உடையவனே! ரவிக்கை (இவர்) ஏறி உள்ள (அணிந்துள்ள) தென்னங் குரும்பை போன்ற கொங்கைகளைக் (கைத்தவர்) வெறுத்தவர் க்ள்ாகிய பெரியோர்கள் விரும்பும் கச்சியில் வீற்றிருக்கும் ஒளிவேலனே! கற்பகக் காட்டைக்கொண்ட (கற்பு) நீதி நெறியில் நிற்கும் (அகம்) உள்ளத்தைக் கொண்ட விண்ணுலகத்தவராம் தேவர்களின் கை விலங்குகளை அவிழ்த்தெறிந்த பெருமாளே! (அஞ்சலென வேணும்).