பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1082

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைமருதூர்) திருப்புகழ் உரை 523 சந்திரன் பயந்து ஒடவும், சூரியன் அதைக் கண்டு தானும் ஒடவும், (கடம் மண்டா) காட்டிலும் (மண்டி) நெருங்கிச்சென்று (அங்குள்ள) நல்ல தவசிகளும் குடும்பத்துடன் ஒடவும் எங்கே அந்த மலையில் (ஒளித்திருப்பவர்கள்), எங்கே இந்த மலையில் (ஒளித்திருப்பவர்கள்) என்று கூறியே (திக்கென) அங்கங்கே உள்ளவர்களின் உள்ளம் திக் எனும்படி திடுக்கிடும்படியாக வந்த சூரனைப். பந்தடிப்பது போல அடித்து வெருட்டியும், தலையற்றுப் போய்ச்சிதறி விழவும், போர்க்களத்தில் வந்தவர்களை (வந்த அசுரர்களை)ச் சில ரண தேவதைகளுக்கு (ரண காளி முதலிய சில ரண தேவதைகளுக்குப்) பங்கிட்டுத் தந்த கந்தனே! (சிறப்பு) மிக்க (திருப்) பனந்தாளில் வீற்றிருந்தருளும் பெருமாளே! (பொருள் இந்தா...என்றே..அருள்வாயே) திருவிடைமருதுரர் 862. அறுகம் புல்லின் நுனியில் உள்ள பணிபோலச் சிறிய துளி (ஒன்று) பெரியதான ஒரு உடலை அடைந்ததாகி, ஒரு குழந்தை உருவம் கொண்டு வெளிவர, அந்த அருமைக் குழந்தையின் மழலை மொழிகளிற் கனிவுகொண்டு மனம் உருகி (அவருடைய) அக் குழந்தையுடைய தாயும் தந்தையும் அதன்மீது(மாய மோகமாய்)ப் பிரபஞ்ச மாயையின் வசப்பட்டு ஆசை பூண்டவராய்.(அருமையினில் அருமையிட) அருமையிலும் அருமையாய் - வெகு வெகு அருமையாக (அன்பு காட்டி வளர்க்க), மொளு மொளு என்று உடலும் வளர, (ஆளாகி) == ஆளும் (மேளமாய்)-கவலையற்ற இன்ப வாழ்க்கையராய், இளம்பருவ உருவத்தை அடைந்து, அவர் ஒரு பெரியவராகி.