பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1090

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைமருதூர்) திருப்புகழ் உரை 531 இனிமை நிரம்பிய பாடல்கள் எல்லாவகையினவும் பாடி, வீட்டின்ப ஞானம் நிரம்ப உண்டாக, அருமையான (செந்) தமிழ் ச பிறக்க, ஒளி வசனம் - அறிவு மொழிகள் பொலிகின்ற வழிபாட்டு நெறியிற் சேரும்படியான பாக்கியத்தை உனது திருவருள் பாலிக்காதோ! (கலகம்) போர் செய்யும் அசுரர்களின் கூட்டம் அழிய, மேருமலை தவிடு பொடியாக, ரத்தவெள்ளமாம் ஓலமிடும் கடல்-சத்தமிடும் கடலின் அலைகள் பேரொலியிட, கோடுகள் பொருந்திய பாம்பை வாயினின்றும் விடாது தன் பசி அடங்கின இன்பம் கொண்ட தோகை மயில்மேல் ஏறி, வேத சன்மார்க்கத்தைப் போற்றும் தேவர்கள் (பொன்னுலகிற்) குடியேற, நாள்தோறும் விளைகின்ற- ஏற்படுகின்ற-மிகப் பொல்லாத வினை வீழ்ந்தழிய, வேலை ஏவுதற்கு எனத் தோன்றிய (என்) செல்வமே! பேய்களுடன் நடமாடும் தந்தை (சிவனுடைய) காது நிரம்ப மவுன உபதேசம் செய்த கடப்ப மாலையை அணிந்தவனே! அழகிய (வள்ளிமலைக்) காட்டில் வாசம் செய்த வேடர் மகளை மணந்த தலைவனே! சமணர்கள் கழுவில் துள்ளிக்குதிக்க வாதுப் போர் கருதிச் செய்த குமரனே! குருநாதனே! நீதியுள்ளனவற்றை அருளிச் செய்யும் தம்பிரானே! திருவிடைமருதுாரில் வீற்றிருக்கும் தம்பிரானே! சிறந்த முநிவர்களுக்குத் தம்பிரானே! (வழிபாடு சேரும் அருள் தந்திடாதோ) o நீதி அருளுவதால் இறைவனை-நீதி என்றே கூறுவர் சம்பந்தர். "வெண்ணியில் நீதியை நினையவல்லார் வினை நில்லாவே" "நீதி நின்னை யல்லால் நெறியாது நினைந்தறியேன்" -சம்பந்தர் 2-14-2; 3-55-6.