பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1092

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைமருதூர்) திருப்புகழ் உரை 533 864. பூமியைத் தனது காலால் அளவிட்ட பெரிய மேகநிறங் கொண்ட திருமாலும், (சண்டனும்) யமனும், அல்லது சூரியனும், (தமரம்) ஒலியுடன் ஒதப்படும் (சதுமறை) நான்கு வேதங்களும், தேவர் கூட்டமும், பிரமனும் போற்றுதற்கு அரிய அரசன், சாமார்த்தியம் உள்ளவன், (சுடும்) சுட்டழிக்கும், சம்பன்னன் - சம்பத்து உடையவன் (அழித்தல் தொழில் மூர்த்தி), செம்பொன் போன்ற மேனியை உடைய பரமன், அழகு கொண்ட பாம்புகளையும். கங்கையையும், லகூழ்மிதேவி வாசம்செய்யும் தாமரையையும், நிலவையும், கொன்றையையும், பருத்த குமிழம்பூவையும், அறுகம் புல்லையும் பெருமை வாய்ந்த தும்பை மலரையும், (செம்பையும்) சிற்றகத்தி மலரையும், நெருங்கிப் பிரதானமாக இருக்கின்ற சடைமுடியில் அணிந்துள்ள நல்ல சங்கரன் (சிவபிரான்) வணங்குகின்ற குமரன், ஆறுமுகத்தன், இனிமைபயக்கும் செவ்விய சொற்களை உடையவன், (கங்கையில்) சரவண மடுவில் வந்த முதல்வன், (தேவ) சேனாபதி, கந்தன் என்று ஈடேறும்படிப் பாடிக் குளிர்ந்த சொற்களைச் சொல்லும் வழி ஒன்றிலும் போகின்றேன் இல்லை; பங்கிட்டு (ஒருவருக்கு ஒன்று ஈய) கொடுக்க ஒரு தினை அளவு ஈகைக் குணத்தையும் கொண்டு (கிட்டுகின்றேன் இல்லை) அணுகுதல் கிடையாது; அப்படிப்பட்ட எனக்குத் தவவழியில் ஒழுகி நல்வழியில் சீர்பெறும் பிரதிக்ஞை - ஒரு பிடிப்பான முயற்சி யெண்ணம் உதிக்காதோ! (எண்ணம் உதிக்க உன் திருவுளம் நினைக்காதா)! ஒலி - சொல் - நின்னுருவமும் ஒலியும் ஆகாயத்துள’ - பரிபாடல் 4.31. xx"பகிர நினைவொரு தினையள விலுமிலி" திருப்புகழ் 1009 oo "வேண்டிக் கொள்வேன் தவநெறியே" - சுந்தரர் 7-13.