பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப் |கழ் உரை 103 கரந்துறை பாடலில் உரை விஷத்தைக் கக்கும் களங்கம் உள்ள நிலவாலும் விசேஷ திரைகளை வீசும் கடலாலும், இந்தச் சிறுபெண் வேதனையடைந்து மெலியாமல் இப்பொழுதே அஞ்சல் என்று கூறியருள வேண்டுகின்றேன்; பசுமை கொண்ட மலை எங்கும் உறைபவனே! (வில்வம் ஆதிய) பத்திரங்களை அணிந்த திருவடிகளை உடையவனே! கச்சியில் வீற்றிருக்கும் ஒளிவேலனே! (தேவர்களின்) கை விலங்கை ஒழித்த பெருமாளே. 487. வஞ்சனை கூடிய நடவடிக்கையை அறியாமை கொண்ட மனத்தில் உள்ளபடியே மேற்கொண்டு அப்போதைக்கப்போது (நொடி - தந்திரச்) சொற்களை விடுகதை போன்ற சொற்களைப் பேசுகின்ற (பகடிகட்கு) வெளி வேஷக்காரருக்கு (பொதுமகளிர்க்கு) (அவர்கள்) உள்ளம் மகிழ்ச்சி கொள்ளும்படி உடலையும் பொருளையும் பல முறையும் தத்தம் செய்து (கொடுத்து) (அல்லது அவர்தம் உடல் இன்பம் பெறவேண்டிப் பொருள் பல கொடுத்து - அல்லது - அவர்கள் பொய்ப் பேச்சுக்கு ஈடாக மெய்யாகவே பொருளைத் தந்து), (பின்னர்) மிகவும் உயிர்வாட வறுமை (தரித்திரம் என்கின்ற பெரிய வடவைக்கனல் வடவாமுகாக்கின்ரி (ஒத்த நெருப்பு) என்னைச் சுடுவதால் துன்பம் அதிகரிக்க (அல்லது துன்பம் விளைய) மிகவும் அத்துன்பத்துடன் வாழும் விரகு ேேல அழிந்து, அரு. நரகில் விழுவது விலகி, நல்வின்ை தீவினை என்னும் இருவின்னகளும் ஒழிய, (உனது) திருவடியைத் தந்தருளுக. கொடிபோலும் இடையை உடைய குறக்குலத் அழகியை (வள்ளியைக்) கலந்த குமரனே! கச்சியில் வீற்றிருப்பவனே! குரா, வெட்சி, வெண்டாமரை, புதிதாக மலர்ந்த குவளைப்பூ இவை எல்லாம் நிரம்ப அணிந்து கொள்ளும் அழகிய மார்பனே!