பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பகோணம்) திருப்புகழ் உரை 549 871. மாலைப் பொழுதில் வந்து வீதியிலே நின்று, நறுமணம் உள்ள மலர்களைச் சிந்தும் கூந்தலைச் சீவிக் சிக்கெடத்து ரவிக்கை அணிந்த இரண்டு கொங்கைகளும் (அணிந் துள்ள) ஆபரணங்களுடன் குலுங்க ஆசை.காமம் பெருகி நின்ற மாதாகளைத தெருவின் வழியே வந்து போகின்ற ஆடவர்கள் நின்று (கண்டு) அம்மாதர்களின் தாழ்ந்து தொங்கும் கூந்தலைப் பார்த்து (உள்ளம்) தடுமாறிக் காம மயக்கம் கொண்டு ஆசை இருளிலே அழுந்தி மிக மிக (மனம்) நொந்து (தவிப்பதுபோலத்) தவிப்பு உறாமல் காலையில் எழுந்து, உன்னுடைய திருநாமங்களையே மொழிந்து, அன்பார்ந்த உமையின் குமரனே என்று ஒதி, இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனப்படும் மூன்று காலங்களையும் உணரும்படியான சக்தியை அடைந்து, ஞானாகாச வெளியை (நான்) ஞானக் கண்கொண்டு காண, (உனது) திரு அருளை என்று பெறுவேனோ! போர்க் கோலத்துடன் அன்று சூரனது சேனைகளின் முன்பு கோபத்துடன் நின்ற குமரேசனே! மாதர்கள் (வள்ளிதேவசேனை) இரண்டு பக்கங்களிலும் விளங்கத் (கல்வி, செல்வம்) வளரும் கும்பகோணப் பதியில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே! (அருள்ென்று பெறுவேனோ) 872. கறுத்த மயிரும் வெளுத்துப்போய், எழுந்து வரிசையாய் உருவு கொண்டிருந்த வெள்ளைப் பற்களும் எல்லாம் விழுந்து போய், உள்ளே கருத்துக்களுடன் விளங்கியிருந்த புத்தியும் மருட்சி அடைந்து மயக்க அறிவாகி, (உடலைச்) சுருட்டி மடக்கும் நோயால் கலக்கம் அடைந்து (இவ் வாழக்கை) போதும் போதும் என்னும் மனநிலை வர, நீர்வற்றிப் பழுத்த பழமாய், நிமிர்ந் தோங்கி இருந்த முதுகு வளைவு உறக் கழுத்திலே வந்து கோழையும் இருமலும் ஒதுங்கி நிற்கக் கொ ழுத்திருந்த மேனியானது.