பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமீச்சுரம்) திருப்புகழ் உரை 555 தினைப்புனத்திலே - காம இச்சையால் . ஒப்பற்ற மயில் போன்ற வள்ளியின் பாதத்தில் (சரண் நான் என) அடைக்கலம் நான் என்று (நீ)கூறத் தனது திருப்புயங்களை உனக்குத் தந்த மயக்கவல்ல மான் வள்ளியை அணைபவனே! (சிவக்கொழுஞ்சுடரே) சிவத்தினின்றும் தோன்றிய செவ்விய சுடரே! (பரனாகிய தவத்தில் வந்தருள் பால க்ருபாகர) தவத்தில் வந்தருள் பரனாகிய பால க்ருபாகர தவஞ்செய்வோர் பொருட்டுப் பரமனாக வெளித்தோன்றி வந்து அருளும் குழந்தைக் க்ருபாகரனே! திருக்குடந்தை (கும்பகோணத்தில்) வாழும் முருகா!தேவர்கள் பெருமாளே! (சிவயோகமும் ஞானமும் அருள்வாயே) சோtச்சுரம் 874. கறுத்த கூந்தல் சரிந்துவிழ, முகம் வேர்வுகொள்ள, நறுமணம் உள்ள (களபமுலை) கலவைச்சாந்து அணிந்துள்ள கொங்கை புளகாங்கிதம் கொள்ள, செவ்வையான வேல் போன்ற விழிகள் கயல்மீன்கள் பொருகின்ற (சண்டை செய்கின்ற) செயலை ஒக்கப் பெரிய பூசலைச் செய்ய (காதுகளோடு பொர), நல்ல கொவ்வைக்கனி போன்ற வாயில். நறுமணம் உள்ள குமுதமலர் ஒத்த அதரம் எனப்படும் இதழினின்றும் தேன் அனைய ஊறல் பாய, அது நிரம்பக் கடலமுதம் போன்ற அமுதத்தை உதவ, இரண்டு தோள்களிலும் மாலை தாழ்ந்து புரள, வளைகள் கலகல என்று ஒலிக்க, மொழிகள் பதற, மிக்க காம ஆசையானது கரை கடந்து பெருகி எரியிற்பட்ட மெழுகின் நிலையை (மேவி அடைந்து, மேவி இணை) இணையாக ஒன்றுபட்டு, இருவர் உடலும் ஒருவர் உடல் போல இணைந்து, கூச்சமில்லாமல், படுக்கையில் இளம் பெண்களுடன் புணர்ச்சியின்பத்தில் நான் முழுகி ஆழ்ந்திருந்தாலும், கண் இமை கொட்டுதலின்றி