பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டையூர்) திருப்புகழ் உரை 559 கொட்டையூர் 875. பட்டாலாகிய அழகிய ரவிக்கையை அழுத்தமாகக் கட்டியும் அவிழ்த்தும், (உத்தரியப் பத்தியின்) மேலாடையின் வரிசையின் கீழ் முத்து (மாலை) நெருங்கிய மலை யிரண்டாகும் என்று சொல்லத் தக்கனவும். தாமரை மொட்டுப் போன்றனவுமான குத்து முலைகளை உடைய கிளை போன்ற வேசையர்களின் கையில் அகப்பட்டு, அவர்தம் வசத்திலே சிக்கி உருகிக் கேடு தருவதும் வினையைப் பெருக்குவதுமான செயல்களிலே-(ஈடுபட்டுத்) துஷடன் என்றும், துன்பத்துக்கு ஆளானவன் என்றும், பித்தன் என்றும், (பிரட்டன்) நெறியினின்று வழுவினவன் என்றும், எங்கும் திரியும் (மறச்சித்தன்) பாவ எண்ணங்களை உடையவன் என்றும் திரிகின்ற என்னுடைய துக்கங்களை ஒழித்துத் தாமரையன்ன அழகிய திருவடியில் என்னைச் சேர்த்தும், (பதவிச் சுத்தி) சுத்திப்பதவி-பரிசுத்தமான நல்ல பதவியை அணைந்துள்ள பக்தர் கூட்டத்திற் சேர்ப்பித்தும் அருள்புரிவாயாக சுட்ட தங்கக்கட்டி போன்ற தேகத்தை உடையவளும், செங்கமலத்தில் வீற்றிருக்கும் இலக்குமியுமேயான அழகிய கொடிபோன்ற சீதையைத் துக்கப்படும்படிச் செய்து, ஆகாயத்தை அளாவும் (யாழ்) வீணைக்கொடி விளங்கும். துய்மை வாய்ந்த தேரில் (அவளை) எடுத்துக் கொண்டுபோய் வேகமாகத் தெற்குத் திசையை (அடைசி) நெருங்கி, வளைந்தமைந்த (அசோக) வனத்திற் சிறையில் வைத்த (ராவணன்) என்னும் தைரியசாலியின் ராவணனுக்கு வீணை ( யாழ்) கொடி (சடாயு) ராவணனுடைய "காண்டகு நீண்ட வீணைக் கொடிப் பற்றி யொடித்துயர் வானவர் ஆசி கொண்டான்" -கம்ப ராமா-சடாயு உயிர்-107