பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுரம்) திருப்புகழ் உரை 561 (கொட்டம்) இறுமாப்பு அழிவடைய, புற்றுப் பாம்பின் கோபம்போலக் கோபிக்கும் கோபம் அற்று ஒழிய, (சத்தம்) குரல் ஒலியும் அடங்க, சுற்றத்தார்கள் யாவரும் மாண்டுபோக, அவனுக்கு இருந்த பல தோள்களின் வீரம் குலையப் பத்துமுடிக் கூட்டத்தை அறுத்துத் தள்ளின வீரம்கொண்ட (கொற்றர்) கொற்றவர். வெற்றியாளராம் ரு ராமர் (திருமால்) பணிந்து பூசித்த கொட்டையூரிற் பெருமாளே! (பத்தரில் வைத் தருள்வாயே) சிவபுரம் 876. மனமென்னும் ஒரு பொருளுடனே (வான்) ஆகாயம், (அறைகால்) எறிகின்ற காற்று, நெருப்பு, நீர், இவையுடன் (புவி) மண் (ஆகப் பஞ்சபூதங்கள்) கூடியதான ஒரு தேகம் என்னும் உருவத்தைக் கொண்டு, அதிலே (13 x 7) 91 தத்துவக் கூட்டங்களின் கூறுபாடுகளாலே ஏற்படுகின்ற இன்பம், துன்பம், ஆசை எனும் இவற்றிலே அலைச்சலுறுகின்ற என் புத்தியை நான் ஜெயித்து அடக்கி மிக மேலானதான ஞானமென்னும் நன்னெறியைப் பெறும். படியாக, நாயனைய அடியேனுக்கு உன்னுடைய திருவருளைக் கூட்டுவிப்பாயாக! (ஜெனனி) (உலகங்களின்) தோற்றத்துக்கு ஆதாரமானவள், சங்கரி, (ஆரணி) வேத முதல்வி (அல்லது) ஆத்திமலரணிந்தவள். நாராயணி, (விமலி) குற்றமற்றவள், எண் குணங்களும் நிறைந்தவள், எவற்றிற்கும் காரணமானவள், சிவை, பராபரை ஆகிய பார்வதிதேவி அருளிய குழந்தையே! O எண்குணம்-பாடல் 766-பக்கம் 282 கீழ்க்குறிப்பு எண் குணங்களாவன - தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை (திருக்குறள் (9) உரை).