பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாகேச்சுரம்) திருப்புகழ் உரை 563 சிறையிலடைபட்டிருந்த தேவர்களும், பெரிய முநிவர் களும் மேலான சுக நிலையைப்பெற, அசுரர்களுடைய கிட்டமெல்லாம் வேரற்றழியச் சிவபெருமான் மகிழ்ந்து (உனக்கு அருளிய கூர்ம்ைகொண்ட வேலைச் செலுத்தின முருகனே! (கனகன்) இரணியன் தனது அங்கையால் அறைந்த தூணினின்றும் (மனித சிங்கமதாய்) நரசிங்கமாய், மலை, பூமி, திசைகள், கடல் இவையாவும் கலக்கம் கொள்ளும்படித் (தோன்றி) (அந்த இரணியனுடன்) போர்செய்து நகத்தின் நுனியாலே (அந்த இரணியனைக்) கதறியழும்படிச் செயங்கொண்டு அவன் உடலைக் கீறிப் பிளந்து, அவனது அரிய உயிரை இரத்தம் சிதறாதவண் ணம் அமுதாக உண்ட தாமரை போலும் (உந்தி) கெர்ப்பூழை உடையவனாகிய திருமாலின் அழகிய மருகனே! சூரியன். (கரும்பு) வில்கொண்ட (வேள்) மன்மதன், அருள் நிறைந்த முநிவர்கள், தேவர்கள், ந்திரர்கள், நாகலோகத்துத் தலைவர்கள், பிரமன், செ ய சிறந்த அந்தணர்க்ள் போற்றிப் புகழும் அழகனே! அஷ்ட லகூழ்மிகள் நிறைந்த வீடுகளுடன், அழகிய பொன்னால் ஆய (ஆலயம்) கோயில் சிறப்புற்று விளங்கும் சிவபுரம் என்னும் தலத்தில் வாழ்கின்ற குருமூர்த்தியே பெருமாளே! (ஞானநல் வழிபெறும்படி...அருள் சேராய்). திருநாகேச்சுரம் 877. ஆசார ஒழுக்கங்களில் குறைபாடு உடையவர்களாய் விதண்டாவாதம் (முறைகெட்ட தருக்கம்) செய்பவரான துஷ்டர்கள், தாய் தந்தையரைப் பழிக்கின்ற துஷடர்கள், (ஆமா) பசுவின் மா மிசத்துக்காக அதைக் கொல்லும் துஷடர்கள், பிறன் மனைவியை x அகமொ டம்பொனின் ஆலயம்: நகர்மதிள் கனம் மருவிய சிவபுரம் (கனம் - பொன்). சம்பந்தர் 1-2-3