பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சத்திமுத்தம் திருப்புகழ் உரை 569 ஒப்பற்ற பத்துத் தலைகளுடன் (போருக்கு) வந்த ராவணன், இருபது கரங்களுடன் ஏந்தின வாளானது தனது ஒரே பாணத்தால் அற்றுவிழும்படி (பாணத்தைச்) செலுத்தின திருமாலின் மருகனே! உன்னுடைய அடியார்களுடைய புகழை ஆராய்ந்த நூல் வல்லவர்களும், அல்லது உனது அடியார்களும், (உனது) திருப்புகழை ஆய்ந்த நூல் வல்லவர்களும், தேவர்களும், முநிவர்களும், கொடையால் ரகூதிப்போர்களும், உயர்ந்த நற்கதியைப்பெற, அருள் விளங்கும் அழகிய மயிலில் வீற்றிருப்பவனே! ஒலிக்கின்ற உனது திருவடியைத் தாழ்மையுடன் கும்பிடாதவர்களும், சண்டை செய்யும் போர்க்களத்தே தருமநெறியைக் கைவிட்டவர்களுமான சூராதிகளின் குல முழுமையும் - அசுரர்கள் யாவரும் - மாண்டுபோய்ப் பொடியாகும்படிக் கோபித்தவனே! பொல்லாத விஷத்தைக் கொடு’ என வாங்கி அழகிய கழுத்தினில் இரு' என்று அதை நிறுத்தி, அங்கேயே அதைத் தாங்கி நிலைக்கவைத்த சிவபிரானுக்குக் குருமூர்த்தி என வந்துள்ள பெருமாளே! கூந்தலூர் என்னும் தலத்தில் உறைகின்ற பெருமாளே! (தாள் தொழ அருள்வாயே) திருச்சத்திமுத்தம். 879. (கடகரி) காட்டுயானையின் (அல்லது) மதயானையின், தந்தம்போலக் (கதிர்த்து) - ஒளியுடன் வெளிப்பட்டு யாவரும் மிகவும் பிரமிக்கத்தக்கவகையில், மார்பிடம் முழுமையும் நெருக்கமாக அடைத்துப் பருத்து வளர்கின்றதும், பொற்குடம் போன்றதும், பெரிதாயுள்ள ரத்னாபரணத்தாலே கனம் கொண்டுள்ளதும், O உரம் இடம் நெருக்குதல்: "ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்" திருவாசகம்போற்றி 34. "இடையீர்போகா இளமுலை" - சம்பந்தர் 1.54.2. |