பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சத்திமுத்தம் திருப்புகழ் உரை 571 ஒளி விளங்கும் சிமிழ்போல நன்கு தோன்றும்படி பொருத்திவைக்கப்பட்டு, ழ்ச்சியை ஊட்டும் தாமரையின் மொட்டைப்போல அன்புடன் பாராட்டப்பட்டு அமைந்துளதுமான கொங்கையை, நறுமணம் வீசும் வாசனைகொண்ட செந்நிறமுள்ள (கலப்பை) கலவைச் சாந்து (பொதிந்துள்ள) நிரம்பியுள்ள கொங்கையை விட்டு நீங்காது விஷத்தையும், மாவடுவையும் போன்று (வில்) புருவமான வில்லின் கிழ்ச் சிக்கவைத்த செயலுக்கு ஒப்ப நின்று, (நிறம் இயற்றிக் குயிற்றி) ஒளி தருதலைச் செய்து - ஒளிவீசிப் புரள்வதாய் எழுகின்ற கயல்மீன் போன்ற கண்கள் வெருட்டியும், ஒட்டியும், காதில் உள்ள குழையின்மீது பாய (அதனால்) க(ள்)ள மதனனுக்கு - திருட்டுத்தனம் உள்ள மன்மதனுக்கு வெற்றியைத் தந்து உலவுகின்ற கடுமையான சொற்களை (அல்லது விஷம் போன்ற மொழியை) அதிகமாகப் பேச அதனால் நான் களைத்துச் சோர்வு உற்று அந்தக் (கொடிச்சியர்களின்) கொடி போன்ற பெண்களின் (கணியினில்) க(ண்)ணியினில் - வலையில் அகப்பட்டு (அந்தச் சிக்கு) என்னை அழுத்துவதால் துன்பப்படுவதை ஒழிக்க மாட்டேனோ! நீக்கேனோ! சாம்பல் பூசும் முக்கண் பெருமானுக்குப் பொருள் சொல்லி அரிய மறைப்பொருளை உபதேசித்து, உலகத்தைப் பெருத்த மயிலை முன்பு நடத்தி, ஒரு கணப்பொழுதிற் சுற்றி வந்த அழகனே! (அபகடம்) பொல்லாங்கு - வஞ்சகப் பேச்சைப் பேசி, (அத்தம்) பொருட்செல்வம் நிரம்ப உடையவராய், உலகிலே எளியோரைப் பயமுறுத்தி மயக்கிப் மியிற் பிழைக்க எண்ணுகின்ற மூடர்களின் மனத்தைக் கலக்கியும், (துணித்தும்) வெட்டிப் பிளந்தும், நெருக்கும் அதி சூரனே! விஷங்கொண்ட பாம்பணையில் துயில் கொள்ளும் கிருபா மூர்த்தி, ULJ/T&TJXOUT (கஜேந்திரனுடைய) (செப்பை) செப்புதலை கூச்சலிட்டழைத்ததைக் காதில் நன்கு ஏற்று மிக்க வேகத்துடனே கருடன்மீது விளங்கிப் பிரியத்துடனே வந்த ஒப்பற்ற திருமால்.