பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவலஞ்சுழி திருப்புகழ் உரை 573 அன்பு கொள்ளும் மருகனே! (கொக்கில்) மாமரமாகக் கடலில் நின்ற சூரனை நெறு நெறென வெட்டின உக்ர வேலாயுதம் என்னும் ஒப்பற்ற படையை உடையவனே! இடபவாகனங் கொண்ட சிவபிரான் (வீற்றிருக்கும்) திருச்சத்திமுத்தம் என்னும் தலத்தில் விளங்கும் பெருமாளே! (துயர்ப்படுவ தொ ழியேனோ) திருவலஞ்சுழி 880. மகரமீன்போலச் செய்யப்பட்டகுண்டலம்)காதணியின் மேலே வந்து தாக்குவனவாய் (அருண பங்கயமோ பூ ஒடையில்) தாமரைக்குளத்தில் உள்ள சிவந்த தாமரையோ, பொருந்திய செங்கழுநீர்ப் பூவோ, நீ செலுத்தும் கூரிய வேலோ, மன்மதன் செலுத்தும் பாணமோ, வாளோ, சில கயல்மீன்களோ, கெண்டைமீன்களோ, சேல்மீன்களோ, கொலைத் தொழில் புரியும் யமன் என்னப்பட்டவனோ, மானோ, தேன் உண்டு இசை ஒலிக்கும் வண்டின் கூட்டமோ, ஆகாயத்தின் மீது எழுந்து நிலவை சந்திரிகையை உண்ணும் புள்ளோ - சகோரப்பகூதியோ (நிலாமுகிப் புள்ளோ), மகாதேவர் - சிவபிரான்-உண்ட பழைய கொடிய (ஆலகால) விஷமோ, (தேமா) தித்திக்கும் மாவின் வடுவின் பிளப்போ, உலகு முடியும்போதெழும் கடலோ, (பின்) எதுவோ என்று சொல்லும்படி உலவுகின்றதான கண்கள் கொண்டு நேரே கொள்ளையடிக்கும் வழியைத் தெரிந்துள்ள பிசாசே ஒத்தவரான (பொதுமகளிரின்) சம்பந்தம் ஆமோ! (சம்பந்தம் கூடாது என்றபடி)