பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவலஞ்சுழி திருப்புகழ் உரை 575 ஒப்பில்லாத வஞ்சகச் செயலில் வல்ல மாரீசன் முதலிய அரக்கர்கள், ராவணன், அவனுடைய கோடா கோடிக் கணக்கான சேனை அரக்கர்கள் இவர்கள் யாவரும் அழியும்படி ஒரு (ஏ) அம்பைச் செலுத்திக் கொல்லும் போரை, அல்லது அடுத்துவந்த போரைச் செய்த (நெடியன்) (மாயோன்), அங்கு அநுமாருடன் எழுபது வெள்ளம் குரங்குப் படையால் வணங்கப்பெற்ற அரசன், (அம்பரர்) தேவர்களுக்குத் தலைவன், ராகவனாய் அவதரித்தவன்-ஆகிய திருமாலின் மருகனே! மேலான தேவர்கள், பகீரதன் முதலிய அடியார்கள். (ஞான) ஒளி பொருந்திய (பிராசாதாதிகள்) அனுக்கிரகம் (வரப்பிரசாதம்) பெற்றவர்கள், சிவ சம்பந்தமான கிரியைகள் வல்ல ஈசானன் முதலியோர், சிவ மெளனிகள் தெளிந்துள்ள மந்திரகலா மந்திர சாத்திரத்தில் - பாய் யோகிகள் மனத்தைச் செலுத்தின யோகிகள் இவர்கள் யாவரும் பக்கத்திலே விளங்கநின்ற சுவாமியே! (அல்லது. சிவமெளனிகள் . இவர்கள் தெளிந்துள்ள பிரணவ மந்த்ர ரூபமான (கலாபா) கலாப மயிலனே யோகிகள் பக்கத்திலே விளங்கும் சுவாமியே! அழகிய திருவலஞ்சுழியிற் செல்வனே! தேவர்கள் பெருமாளே! (பசாசே போல்பவர் உறவாமோ) வெருட்டி அனுப்பித் தனித்திருந்தபொழுது இராவணன் சந்யாசி வேஷத்துடன் வந்து சீதையை வஞ்சித்து அவளிருந்த நிலத்தைப் பேர்த்து அப்படியே தேரில்வைத்து இலங்கைக்குச் சென்று சீதையை அசோகவனத்திற் சிறையில் வைத்தான். சீதையை இழந்த ராமபிரான் சுக்ரிவன் என்னும் குரங்கின் தலைமையில் அநுமன் முதலான எழுபது வெள்ளம் சேனையுடன் சென்று, ராவணனைக் கொன்று, சீதையை மிட்டனர். t ஒரு ஏ (அம்பு) - பாடல் 152-பக்கம் 6-கீழ்க்குறிப்பு # எழுபது வெள்ளம் சேனை - பாடல் 811-பக்கம் 390 பாடல் 515-பக்கம் 130 கீழ்க்குறிப்பு. x பகிரதன் . சூரிய வமிசத்து அரசன் சாம்பலாய்ப் போன தன் மூதாதையர்களான சகரர்கள் நற்கதி அடைய வானத்தினின்று கங்கையை வரவழைத்தவன். முருகவேளை வல்லக் கோட்டையிற் பூசித்தவன். வெள்ளிக்கிழமை விரதம் பூண்டு தன்னை வென்ற கோரன் என்னும் அசுரனைக் கொல்வித்தவன்.(கந்தபுராணம்-6-23 (4.7).