பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவளுர்) திருப்புகழ் உரை 591 விஷம் கவுளில் (கன்னத்தில்) ஏறக் (காளிங்கனது) படத்தின்மீது ஆடி நடிக்கும் அத் தகைமை கொண்ட சிறந்த சர்ப்ப சயனப் பாயலிற் பள்ளிகொள்ளும் மாயன். வில்லை அங்கையால் முறித்துச் சென்று, தாம் செல்லும் இடங்களை எல்லாம் சிறப்பாக்கி வைத்து விளங்கின மேகநிற அண்ணல் ரீராமர் - ஆகிய திருமாலுக்குப் பிரியமான மருகனே! (தடம்) நீர் நிலைகளைக் கொண்ட மலைச்சாரல்களில் நடுங்குகின்ற மயிலும் அதன் பெடையும் சூழ, ஒலி செய்யும் தகுதியுடன் பாடி வண்டுகள் (3,էՔ விளங்கும் வயற் பக்கங்களைக் கொண்ட, குரங்குகள் குதித்து விளையாடும் தலங்களில், மனம் உவந்து வீற்றிருக்கும் பெருமாளே! (பொற்பாதம் அருள்வாயே) காவளுர் 886. மானுக்கொத்த கண்ணொடு கூடிய மங்கையர், பாலுக்கொத்த மொழியொடு கூடிய பேச்சினர், நறுமணமுள்ள நல்ல மலரை அணிந்துள்ள, (அழகில்) தெய்வமகளிரை ஒத்தவராகிய வேசையர்.இவர்களின் இரண்டு தோள்கள் மீதிலும். மார்பின் மீதிலும், முத்துமாலை, புரள, (காமபூரண) காம இச்சைக்குப் பூரண இடம் தரும் தங்கக் கடகம் என்னும் வளை பொருந்த (அல்லது ஒளி வீச), கடல் நீலநிறமுள்ள (வளைக்கை - கைவளை) வளையல் ஒலிசெய, காமப் பற்று. (590-ஆம் பக்கத் தொடர்ச்சி) x "தடங் கதலிக்கான" என்றும் பாடம்: கதலிக்கானம் என்பது திருக்கழுக்குன்றம் குரங்கு குதித்தாடு தலங்கள் - வட குரங்காடுதுறை - தென் குரங்காடுதுறைத் தலங்கள்.