பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விஞ்சுறு மாவுன தடிசேர. விம்பம தாயரு ாருளாதோ: நஞ்சமு தாவுனு மரனார்தம். நன்கும ராவுமை யருள்பாலா, தஞ்சென வாமடி யவர்வாழத். தஞ்சையில் மேவிய ೧uj:* ) 888. பிரமை தீர தந்த தானனத் தந்த தானனத் தந்த தானனத் தனதான அம்பு ராசியிற் கெண்டை சேலொளித் தஞ்ச வேமணிக் குழைவீசும். அங்க ணாரிடத் தின்ப சாகரத் தங்கி மூழ்குமிச் சையினால்ே, எம்பி ரானுணைச் சிந்தி யாதொழித் ந்த்ர சாலஇப் ப்ரமைதீரகு வாவெனப் பண்பி னாலழைத் தெங்கு மாணமெய்ப் பொருள்தாராய், கொம்பு போலிடைத் தொண்டை போலிதழ்க் கொண்டல் போல்குழற் கனமேருக். குன்று போல்முலைப் பைங்கி ராதியைக் கொண்ட கோலசற் குணவேலா; t சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச் சம்பு போதகக் குருநாதா. * ஒழித்த இந்த்ரசால எனப்பிரிக்க f சம்பராரி - மன்மதன் சம்பரன் - ஒரு அசுரன். இவன் கிருஷ்ணனுக்கு ருக்குமணியிடத்துப் பிறந்த பிரத்தியும்நனைத் தனக்குப் பகைவன் என எண்ணி சிசுவாயிருக்கையில் கடலில் இட்டனன். அந்தச் சிசுவை ஒரு மீன் விழுங்கிற்று அம் மீன் ஒரு வலைஞன் வலையில் அகப்பட்டது. அவன் அதைச் சம்பரனிடம் கொடுத்தான். சம்பரன் மனைவி மாயாவதி அதைக் கறிசெய்ய அரிந்தபோது அதனுள்ளேயிருந்து கிடைத்த குமரனை அவள் வளர்த்தாள்: அவன் வளர்ந்த பின் சம்பரன்தான் தன்னைக் (தொடர்ச்சி 595-ஆம் பக்கம் பார்க்க)