பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை திருப்புகழ் உரை 597 வலிமை - திண்மை வாய்ந்த கோபுரமும் செம்பொன் விளங்கும் மாளிகைகளையும் கொண்ட தஞ்சை மாநகரில் வீற்றிருக்கும் பெருமாளே! (ப்ரமைதிர மெய்ப்பொருள் தாராய்) 889. நறுமணமுள்ள நீண்ட கூந்தலைச் சிக்கெடுத்துவாரி, மாலையைச் சூடிக்கொண்டு, மஞ்சளை அழகுடன் உடலில் நிரம்பப் பூசிக், (கண்டம்) கழுத்தில் மாலையாக ஆணி முத்துமாலையை அணிந்து தெருவிலே பார்த்த பேர்வழிகளை எல்லாம் (அவாவினில்) ஆசையுடன் அழைத்துக் கொண்டுவந்து, வளப்பம் உள்ள கொங்கைப் பாரமாகிய மேரு மலையைத் திறந்து வெளியிற் காட்டி, கண்கள் என்னும் கூரிய வேலாயுதத்தை வேகமாகச் செலுத்தித் (தனக்குச் சேரவேண்டிய தொகை இவ்வளவு என்று) விலைபேசி. வந்தவரைக் கையால் எடுத்து அணைந்துகொண்டு, தேன்போல இனிக்கும் வாயிதழ் ஊறலை வாயை வைத்துப் பருகி. (மந்த மாருதம்) தென்றல் வீசும் பாயலிலே புணர்ந்து காமமயக்கம் கொள்ளும். மாதர்களுடன் அனுபோகம் செய்வதால் வரும் கொடிய வினைகளுடன் கூடிய பிறப்புக்கள் எல்லாம் குலைந்து தொலைந்து போம்படி ஞான வித்தையை அடியேனுக்குத் தந்து (நீயும்) வண்டுகள் உலாவும் கடப்பமாலை சற்றே என்முன் விளங்க வருவாயே இந்த்ரலோகத்துக் கற்பக விருகூத்தைப் பூமிக்குக் கொண்டுவந்த (பாஞ்ச சன்னியம் என்னும்) சங்கத்தைக் கையில் ஏந்தியவன், ஆதிகேசவன் என்னும் - ப்ரகியாதி (கி.ர்த்திப் பெயர்) பெற்றவன் (என்று) சூரியனுடைய ஒளிபோன்ற ஒளிதங்கி விளங்கும் கவுத்துவம் என்னும் மணியை மார்பில் அணிந்துள்ளவன், வீர பராக்ரமன் ஆகிய திருமாலின் மருகனே! இந்திராணி பாரிஜாதப் பூ மானிடப் பெண்ணாம் சத்யபாமைக்குத் தகாதென்று கொடாதிருக்கச் சத்தியபாமையின் வேண்டுகோளின்படி கருடனைக் கொண்டு அந்தப் பாரிஜாத மரத்தையே வலியப் பறித்து வந்து சத்யபாமையின் வீட்டு முற்றத்தில் நட்டருளினார். அப்போது இந்திரன் முதலிய தேவர்கள் கண்ணபிரானொடு போர் செய்யக் கண்ணபிரான் தனது சங்க நாதத்தினாலே அவர்களை மோகித்து விழும்படிச் செய்தனர். (தொடர்ச்சி 598ஆம் பக்கம் பார்க்க)