பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பழுவூர்) திருப்புகழ் உரை 613 எல்லாவித நீராடல்களையும் ஆடிக் கொங்கை மேலே படும்படி (வளைந்து) இணங்கி, இசை ஞானத்தைக் காட்டி அதனால் உண்டாகும் காமசேஷ்டை வகையதான இனிமையான, (நேத்தி) நேதியாகிய - முறைப்பட்ட சுழற்சியான ஆடலாலே (சதி) தாள ஒத்து முழங்க, வாயில் இசைப்பாடல்கள் பிறக்க, (உந்தியை) வயிற்றை (வாட்டி), இடை தளரக் கண்களை ஆட்டி அசைக்கும் வேசியர்கள் . இவர்களுடைய சம்பந்தம் ஆமோ - சம்பந்தம் கூடாது என்றபடி, சக்கரத்தைக் கொண்டு (பகலை) இருளாக்கி, இருதமையர். கர்ணன், துரியோதனன் ஆகிய இரண்டு தமையன்மார்களையும், ஏனைய தம்பிமார்களையும், (துரியோதனனுடைய தம்பியர்களையும்), மூத்த தாதையர் - திருதராஷ்டிரன். பீஷ்மர் ஆகிய தந்தை பாட்டன் நிலையில் உள்ள பெரியோர்களையும், துரியோதனன் பிள்ளை இலக்கண குமரனாதிய சிறந்த பிள்ளைகளையும், போரை ஏற்றுவந்த சூரர்களான பகைவர்களையும் - அதிகமான (நிறைந்த) பகைவராம் ஜனங்கள் எல்லாரையும் அழிவு செய்து, அவர்கள் உடல் பொடியாக, அவர்களுடைய தேகங்களை நரிகள் திருகி உண்ணப், பேரொலி செய்யும் பேய்கள் (அல்லது கழுகுகள்) நிறைந்த போர்டமியில். (அகடு) நடுவு நிலைமை குறைய மூள்வித்த பாரதப்போர் முடிய, அன்பர்கள் துதி செய்ய, (அரி) இயமன், வாயு, இந்திரன் ஈன்ற மைந்தர்களான தருமன், வீமன், அருச்சுனன் இவர்கள் வாழ்த்தித் துதிக்கும் திருமாலின் மருகனே! தேவர்களும், அந்தணர்களும் துதிக்கவே, மலையும் கடலும் அதிர்ச்சி கொள்ளும்படி நோக்கவல்ல (செய்யவல்ல) சிறந்த மயில்மேல் அழகுடனே பழுவூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (வேசியர் உறவாமோ)