619 திருப்புகழ் உரை لياøpC அஞ்சும்படி அவ்வளவு கறுத்த கூந்தல் புரண்டு அலைய, மென்மைவாய்ந்த குழைகளும் புரள, அழகிய பொன் உருவம் விளங்கும் மங்கை (தேவசேனையைத்) திருமணஞ் செய்து கொண்ட குமரனே! அன்பர்கள் விளங்கும் திருநெடுங்களம் என்னும் வளப்பம் உள்ள ஊரில் தேவர்களும் பிரமனும் பரவிப் போற்றும் தம்பிரானே! (கவலை கொன்று...கழல் இன்று தாராய்) குறட்டி 897. கூர்மை கொண்ட கடைக்கண் பார்வையா லும், மேரு மலைக்கு ஒப்பான மலைபோல மிகவும் மேம்பட்டு எழுகின்ற கொங்கையாலும், (இந்த்ர) கோபம் (தம்பலப்பூச்சி) போன்ற வாயிதழ்களாலும் (உதடுகளாலும்), பொருந்தியுள்ள மாதிரியில்-தன்மையில்-ஆல்-ஆலிலை போன்ற அழகிய வயிற்றினாலும், பேச்சினாலும், சிறந்த வளையல்களை அணிந்துள்ள கைகளாலும், (மேகலை) இடையணியை நெகிழ்ந்து விழும்படிச் செய்கின்ற அழகு அமைந்த இடையினாலும், (விலைம.தர்) வேசையர் என்கின்ற சேற்றிலே (நான்)தினந்தோறும் முழுகி, (என்னுடைய) வாழ்நாளை விணிலே செலவழித்து, மாயை பொருந்திய - மாயை அறிவு கொண்ட மனத்தனாகித் திரிவேனோ! பூமி யதனில் மேம்பாடு உடையவனாகிப் போர் செயும் துஷ்டனான ராவணனும் அவனுடைய மிகப் பெருஞ் சேனைகளும் பொடிபட்டு அழியச் (சாடும்) தாங்கி அழித்த கருடக் கொடிகொண்ட, பெரிய (கரு) மேகம் ஒத்த திருமேனியையும். (தாது) மலர்மாலை அணிந் துள்ள புயங்களையும் கொண்ட திருமாலின் மருகனே!
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1178
Appearance