உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

621 திருப்புகழ் உரை للتسوق யானையைச் சங்கரித்து அதன் தோலை உரித்து, (தாருகா வனத்து இருடி) பத்தினிகளின் இடையணி, கைவளைகள், நாணம் - இவை மூன்றையும் அழகிய பிச்சையால் - பிச்சையாக முன்னாளிற் கொண்ட (நாதன்) சிவபிரானது குழந்தையே! ரவிக்கையை அணிந்த கொங்கைகளை உடையவர்கள் (அல்லது பெருஞ் செல்வர்கள்) சேர்ந்து வாழும் மதிலையும மேல் மாடங்களையும் கொண்ட அழகுள்ள குறட்டி என்னும் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே! (மாயை....உளத்தனாகி உழல்வேனோ) 898. நீரிழிவு, குஷ்டநோய், (ஈளை) கோழை, (வாதம்) வாயு இவையுடன் பித்தநோய், மூலநோய், நெடிதாக நிகழும் குளிர்நோய், சுரநோய், வேறும் உள்ள நோய்கள். கூடியதாய், புழுக்களுக்கு இருப்பிடமானதாய்ப், பிரமன் உண்டாக்கின வீடு, நெடிதாய்ப் பரவியிருக்கும் ரத்தம், மூளை தசை (மாமிசம்) தோல், சீ (சீழ்) பருத்துள்ள ஒன்பது துவாரங்கள், நாறும் - தோன்றும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் (ஆறு) வழியாக (பாய்பிணி) ஏற்படுகின்ற பிணிவகைகளோடு (இயற்றப்பட்ட) ஆக்கப்பட்ட ஒரு பொம்மை (பதுமை), நரியும், நாயும், பேயும். == பருந்தும் கழுகுகளும், (கூகை) கோட்டான்களும் இவைதாம் உண்ணுதற்கு உரிய பாழான (இந்த) தேகத்தை நான் எடுத்து வீண்பொழுதுபோக்கித் திரிவேனோ! o (620-ஆம் பக்கத் தொடர்ச்சி) 'பூணி லங்கிய பொற்றொடி சங்கினம் மானு றுந்துகில் மற்றிவை சோர்தலும் காணு கின்றனர் கைநெரித் தஞ்சியே நாணி வீதி நடுவிருந் தார்சிலர்" 'தெளிவையர் யாரையும் கொல்லு கின்றது வேபலி கொள்வதோ சொல்லு மென்று தொடர்ந்திடு வார்சிலர்" கந்தபுரா 6-13-f6, 52, 75.