பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திக்கெட்டும டக்கிக் கடவுள ருக்குப்பணி கற்பித் தருளறு சித்தத்தொட டுத்துப் படைகொடு பொருஆரர். செச்சைப்புய மற்றுப் புகவொரு சத்திப்படை விட்டுச் சுர்ர்பதி சித்தத்துயர் கெட்டுப் பதிபெற அருள்வோனே, tஅக்கைப்புனை கொச்சைக் குறமகள் அச்சத்தையொ ழித்துக் கரிவரும் #அத்தத்தி லழைத்துப் பரிவுட கணனைவோனே. அப்பைப்பிறை யைக்கட் டியசடை அத்தர்க்கரு மைப்புத் திர விரி அத்திக்கரை யிச்சித் துறைதரு பெருமாளே. (1) - கந்தனுார். (புதுக்கோட்டைக்குத் தெற்கு 3 மைல்) 901. ஞானம் பெற தந்தனா தத்ததன. தந்தனா தத்ததன தந்தனா தத்ததன தந்ததான விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு சன்சரா சர்க்குலமும் வந்துலாவி.

  • சூரபதுமன் திக்கு விஜயம் செய்தபிறகு தேவர்களுக்கெல்லாம் வெவ்வேறு வேலைகள் வைக்கின்றான்.

திருமால் - சூரன் அழைக்கும் போதெல்லாம் உடனே வந்துபோக வேண்டும்: பிரமன் - பஞ்சாங்கம் நாளும் சொல்லிப் போகவேண்டும். சந்திரன் - குறைதல் வளர்தல் இல்லாது நாளும் பூரண சந்திரனாய் வந்துபோதல் வேண்டும். அக்கினி . தனது ஊரில் யார் நினைத்தாலும் உடனே அவர்கள் இட்ட பணியைச் செய்யவேண்டும்; தொட்டால் குளிர்ந்திருக்க வேண்டும். யமன் - தனது ஊரில் எந்த அவுணன் உயிரையும், யானை, குதிரை இவைதம் உயிரையும் கொல்ல நினைக்கக் கூடாது. காற்று - நறுமண வாசத்தை வீசிச் செல்லவேண்டும் (தொடர்ச்சி பக்கம் 629)