பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாலிகொண்டபுரம்) திருப்புகழ் உரை 633 எதுவும் - எல்லாம் என்னுடைய (கோல்). ஆட்சியில் (அடங்கியது) என்னும்படி (பரிவு மேவி) இன்ப நிலையை - சுக நிலையை அடைந்து, (அந்த நிலை நிலைத்து நிற்குமென) நம்பி - இது போதும் - இந்த ஆடம்பரங்கள் போதுமா இவர்க்கு என்று சிலர் கூறும்படி - பொருந்திய தனங்கள் (பொருட் செல்வம்), ஒப்பற்ற (வாகு) அழகிய (சிந்தை) எண்ணங்கள், கொண்டு, பேச்சுக்கள் பேசி, குளிர்ந்த மாலைகளை அழகாக அணிந்து, நறுமணம் வீச, மங்கையர்கள் நடனம் ஆட, வெள்ளைச் சாமரங்கள் மேலெழுந்து வீச, ஊதுகொம்பு, புல்லாங்குழல் முதலியன ஊதிவர, பல்லக்கில் அழகாக வீற்றிருக்கும் பெருமை கூடிய பெரிய வாழ்வைக் கொண்டு 'ಘೀ ஆசையானது வெந்து அழிய, உன்மீது ஆசைமிகுந்து, (சிவ) மங்களகரமான உனது தரிசனத்தைப் பார்த்து உன் திருவடித் தொண்டனெனும் படியான அன்பைத் தருவாயாக. - (சூது) வஞ்சனைச் செயல்களுக்கு இருப்பிடமாயிருந்த (விடர்) மலைப்பிளவுகளைக் கொண்டிருந்த இருண்ட மலை (கிரெளஞ்சமும்), அசுர சூரர்களும் வெந்து பொடியாகி அழிந்து விழ, சூரியனுடைய குதிரைகள் பூட்டிய தேர் (சூரன் ஆட்சிக்காலத்தின் முன் போனது போல) சென்று (நடு பங்கின் ஒட) நேர்வழியில் நடுப்பாகத்தில் ஒட (பொன்) ஒளி பொருந்திய அந்தப் பிரமாவும், இந்திரனும், முதல் தேவர் முதல் கடைத் தேவர் வரை எல்லாத் தேவர்களும் வணங்கிச் சூழ்ந்து நிற்கக் (கனக) சபையில் நடமாடும் எந்தை சிவபிரான் முதலாக யாவரும் அன்பு மிக்கு நிற்க (அல்லது நடமாடும் முதல்வனான எந்தை - சிவபிரான் அன்பு மிக்கு நிற்க) போருக்கு என்று வாது செய்துவந்த அசுரர்கள் மாண்டு அழிய, செவ்விய திருக்கையில் உள்ள வேலாயுதத்தைச் செலுத்தித், தேவர்கள் (பொன்னுலகிற்) குடியேற, (விஞ்சையர்கள்) வித்தியாதரர்களின் மாதர்கள் மனம் மிக மகிழ நின்று நடனம் புரிபவனே!