பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாந்துறை) திருப்புகழ் உரை 635 நறுமணம் உள்ளதும், குடம் போன்றதுமான கொங்கையை உடைய மான்போன்ற வள்ளியிடம் வந்து தினைப்புனத்தைக் காவல் பூண்ட முருகா! (எண்ணும்) மதிக்கத்தக்க, பெரிய, வாலிகொண்ட புரத்தில் பொருந்தி வீற்றிருந்து இலகும் தம்பிரானே! (உனது பாத தொண்டெனன அன்பு தாராப்) திருமாந்துறை 903. (ஆம்) நன்றாயிருந்த குடல் வளைவுற்றுக் கூனி-விழ்வேண்டிய பற்கள் தளர்ச்சியுற்று, ஆய்ந்து ஒய்வுறும் மனம் தடுமாற்றம் அடைந்து நிறைய இருந்த கடன்கள் வாங்க வேண்டுவனவற்றை அறிந்து (வாங்கி), பல வருஷங்கள் - (இங்ங்னம்) செல்லப் படுக்கையிலேயே (கிடந்து) நிரம்ப (அல்லது அவ்விடத்தில்) இருமல் நோய் ஏற்பட்டு, வீங்கும் குடலும் நோவுற்று, சோர்வு அடைந்து, உணர்ச்சியும் அடங்கி, அழிந்து, உயிர் போவதற்கு முன்பு. விளங்கி நிற்கும் மயில் (மேல் நீ) வந்து, (அடியேன்) விண்ணுலகை அடைவதற்கு நீ மனம் உவந்து ஒப்பி (கிருண்பகர்ந்து), நிலைபெற்ற உனது பதங்களைத் (திருவடியைத்) தந்தருளுக. வேங்கை மரங்களும் உயர்ந்தோங்கியுள்ள இனிய தினைப்புனத்தே இருந்த மாதேவி - வள்ளியின் - இனிய மணவாளனே! வேண்டிக்கொள்ளும் அடியார்கள் கொண்டுள்ள (பதம் மிஞ்ச பதவி 醬 ளங்க, அவர்கள் $çಸಿ: (பத்விகள்ை அல்லது) திருவடியை அருள்புரிபவனே! மாம்பழம் உடைந்து அதன்சாறு (வயலில் தேங்கவந்து) . வயலில் நிற்ைந்து தங்கும்படிசேர்ந்து (அதனால்) மாண்பு దేశ - நல்ல :: நெல் விளையும் வளப்பமுள்ள (சோழ) நாடனே! மனிதர்களும், தவசிகளும் தேவேந்திரனும் பரவிப் போற்ற நின்ற, மாந்துறையில் வீற்றிருக்கும் பெருமாளே! (ஊன்றிய பதங்கள் தருவாயே)