பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர்) திருப்புகழ் உரை 645 திரிரிதிரி தரிரிதரி.டட்டட்ட குட்டகுட என்று (திமிர்த) ஒலிசெய்யும் (தவில்) மேளவகை, மிருக டக்கை (மிருகம்) வேட்டைக்கு (இங்கு அசுர வேட்டைக்கு உரித்தான) இடக்கை பெரு முரசுவகை, கூட்டமான (சலிகை) பெரும் பறைவகை, (பக்கங்களிலே வரும் (கணப்பறைகள்) தோற் கருவி வகை, (தவண்டை) பேருடுக்கை, (பேரி) முரசு - (இவை) வகை வகையாக மிகவும் ஒலி எழுப்ப, உக்ரமுடன் - கோபமுடனே அரக்கர்களின் சேனை பக்கங்களிலே சரிந்து விழ, (எழுது) சித்திரம் வரைந்த (துகில்) விருதுக் கொடியானது போர்க்களம் தும் உலவி பட்டம் பகலில் (பருதி) சக்ராயுதத்தை விடுத்து அஸ்தமிக்க வைத்ததுபோல இருளர்க்க, (அங்கு போர்க்களத்தில்) வந்துள்ள குறளிகள் - பிசாசுகள் பெருகிவரும் ரத்தங்களிற் குளித்து, (உழுது) திளைத்து விளையாடி (தொக்கு) உடல், குனிப்புவிட) விளைவை விட. நிமிர்ந்தெழும்படி வெற்றி பெற்ற வேலனே! வயலூரில் எப்போதும் மகிழ்ந்து வீற்றிருக்கும் குமரனே! பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்பவனே! விநோதமான கீர்த்திகளைக் கொண்ட திருமாலின் மருகனே! eos)! திருமுகத்தனே! முக்கட் கணத்தர் சிவ சாரூபக் கூட்டத்தினர் - (அல்லது ருத்ர மூர்த்திகள்) துதிக்கும் அறிவுத் திறம் கொண்டவனே! சிகரங்களை உடைய (வடகுவடில்) வடக்கே உள்ள கயிலை மலையில் நடம்புரியும் தந்தை சிவபிராற்கு முத்தி மார்க்கத்தை - முத்தி அடையும் வழியை (மூலப் பொருளை)ப் பிழையிலா வகையிற் போதிக்கவல்ல தம்பிரானே! (அல்லது அப்பர்க்கு தந்தையாகிய சிவனை அடைவதற்கு (வேண்டிய) முத்திவழியைச் சம்பந்தராகத் . திருநெறிய தமிழ், எனப்படும் தேவார் வாயிலாகத் - தப்பிலாத வகையில் உரைக்கவல்ல சொல்லவல்ல தம்பிரானே! (ரகூதித்தருள்வ தெந்தநாளோ) ருத்திரர்கள் உயிர்களைச் சிருட்டிக்க அவர்களின் உருவு கொண்ட பதினொருகோடி உருத்திரர்கள் தோன்றினர். அதன் பின் பிரமனும் சிருட்டிக்கும் ஆற்றல் பெற்றான். (கந்தபுராணம்-உருத்திரர் கேள்விப்படலம் 2-14). (தொடர்ச்சி 646ஆம் பக்கம் பார்க்க)