பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர்) திருப்புகழ் உரை 647 907. விளங்கும் கொங்கையை விலைக்கு விற்கின்ற மூடர்கள், குற்றம் உள்ளவர்கள், (கலைகள்) புணர்ச்சிக்கு உரிய கரணங்கள் பலவற்றையும் அறிந்துள்ள விளக்கத்தை-தெளிவை -உடையவர்கள், (மருளிகள்) மருட்டுபவர்கள் மயக்குபவர்கள், பற்கடிகள் அடையப் பெற்ற பற்குறிகளைக் கொண்ட உதட்டை உடையவர்கள், பதர்கள் - அற்பர்கள் யாரோடும். இனிமையான நயமான பேச்சுகளைப் பேசப் பழகினவர்கள், அழகுடையவர்கள், முட்டாள்களுடைய பொருளைப் பெறுதற்கு அவர்களுடன் சேருபவர்கள், (சருவிகள்) கொஞ்சிக் குலாவுபவர்கள், யமனும் அனாவசியம் அதிகமே என்னும்படியான அழிதரும் அழித்தல் தொழிலைச் செய்வதும் (அல்லது வழிதரும் வழியைக் காட்டுவதும்) அங்கும் இங்கும் திரிகின்றதுமான சுழலுகின்றதான கண் என்னும் வாள் கொண்டு உலகத்துக்கே துன்பம் ஊட்டும் (நடலிகள்) செருக்கு உள்ளவர்கள் - (அல்லது பாசாங்கு செய்ய வல்லவர்கள்), (மடலிகள்) மடல் ஊரும்படிச் செய்பவர்கள் (அல்லது பனங்கருக்குப் போல்பவர்கள்), (சிலுகு) சண்டைப் பேச்சு சிலரோடு பேசுபவர்கள், பகைமை பூண்பவர்கள், உறவுமுறை (மாமா, அத்தான் என்னும் உறவுமுறை) கூறவல்ல துரோகிகள், சாமர்த்திய ச்ாலிகள், 濫驚 (உகிர்கை) கை உகிர் கைந் நகத்தால் அடையாளக் குறியை இடுபவர்கள், (கமுகிகள்) - கமுக்கம் - ரகசிய அடக்கம் உள்ளவர்கள், (சமுகிகள்) பேட்டி :ே (அல்லது ஒரு கூட்டத்தினர்), (பகடியிடவல) வெளிவேஷம் போடவல்ல் வஞ்சக நெஞ்சினர், (முகடிகள்) மூதேவிகள், நல்ல அறிவு கெட்டுப் ப்ோகும்படிப் (பருவிகள்) அரிப்பு அரிப்பவர்கள், (உருவிகள்) கையிற் ப்ொருள் வ்ரும்ப்டி சரசமாகப் பேசுபவர்கள் ஆகிய விலைமாதர்களின் சம்பந்தம் நல்லதா (நல்லதல்ல என்றபடி) தொடர்ச்சி. நன்மனைதோறும் பெண்களைப்படைத்து, நமனை என் செயப் படைத்தனையே" தனிப்பாடல் (விவேக சிந்தாமணி-82)

  1. பருவி - பருவுதல் அளித்தல் பருவிக் குறவர் புனத்திற் குவித்த பருமாமணி முத்தம்' சம்பந்தர் 1-69.5.