பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அலகை புடைபட வருவன பொருவன கலக கணநிரை நகுவன தகுவன அசுரர் தசைவழி நிமிர்வன திமிர்வன 'பொடியாடி அலரி குடதிசை யடைவன குடைவன t தரும வநிதையு மகிழ்வன புகழ்வன அகில புவனமு மரகர கரவென அமர்வேள்வி: திலக துதலுமை பணிவரு செயமகள் கலையி னடமிட # வெளிவிரி முடியினர் திரள்ப லுயிருடல் குவடுக ளென நட மயிலேறிச். சிறிது பொழுதினி லயில்விடு குருபர அறிவு நெறியுள அறுமுக இறையவ த்ரிசிர கிரியயல் வயலியி விளிது.ஐ பருமாளேX (4) 908. எல்லாம் அவன் செயலே தன்னா தனத்தன தன்னா தனத்தன தன்னா தனத்தன தந்ததான என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும் என்னால் துதிக்கவும் கள்ைகளாலே. என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும் என்னா லிருக்கவும் பெண்டிர்வீடு,

  • படைகளின் துளிஎழ அதில் சூரியன் மறைதலுறுவது, அருக்கன் வெருண்டே பூழிவான் முகடு போர்த்தெழல் கானா வாழி என்றதில் மறைந்து படர்ந்தான் - கந்தபுரா 43.51. சூரியன் மேற்குக் கடலில் முழுகுவது. 'அருக்கனும்...மேற்றிசை வேலை மூழ்கி" வில்லி பாரதம் 1 6ஆம் போர் 91. f சலதி யுடைபட முதிர்வன எதிர்வன” என்றும் பாடம் # "எரி விரி முடியினர்" - அரக்கர் - அசுரர் . இவர்களுக்கு எரி போன்ற தலைமுடி இவர்கள் விரித்த தலை மயிரினர்.

'எளியன மணிமுடி இலங்கைக்கோன்" - சம்பந்தர் 3-19-8 "விரித்த குஞ்சியர் எனும் அவுணர்" - திருப்புகழ் 5, " தானவர் ....செய்ய பங்கியும்" - கந்தபுரா 4-5-25, x இந்தப் பாடலில் " அசடிகள் கசடிகள்" என்பது போன்ற வழி எதுகை நிரம்ப வருவன காண்க.