பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர்) திருப்புகழ் உரை 651 நான் அனுபவித்துச் சுகிப்பதற்கும், (இது வேண்டும் அது வேண்டும்) என்று நான் கிலேசித்து மெலிதற்கும், இதுபோதும் என்று நான் அலுப்பு உறுவதற்கும் (சோர்வு அடைதற்கும்), வாதபித்தசிலேட்டுமங்கள் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதால் வருகின்ற நோய்களை (அல்லது வினைச் சேர்க்கையால் - புணர்ச்சியால் - வரும் நோய்களை) நான் எரித்துத் தள்ளுதற்கும், பல நினைவுகளையும் நான் நினைப்பதற்கும், இன்ப துன்பங்களை தாங்குதற்கும் நான் இங்கு நான் ஆர் (எனக்கு என்ன திறம் - என்ன சுதந்திரம் - உண்டு - ஒன்றும் இல்லை என்றபடி) கல்லினின்றும் நார் உரிப்பதுபோல ( என் நெஞ்சக்கன கல்லைக்கணிவித்த (கசியப்பண்ணின) அரசே! அடியேனுக்கு நல்ல, செவிக்கு அமிர்தம் போன்ற, (பதம்) உபதேச மொழியை அருளின (உபதேசித்த) தலைவனே! உன்னைக் கற்றறியாதார் நெஞ்சங்களில் நிற்பது என்பதையே நினைக்காத மனத்தை உடையவனே-நெஞ்சில் தங்காதவனே! கண்ணாடிபோல மிகத் தெளிவு உள்ள (தடம்) நீர் நிலையை வேல் கொண்டு கண்டவனே! அரசாய் விளங்கின தகூடிப்பிரஜாபதியை முன்பு (அவனுடைய) முடியையும் தலையையும் (அல்லது கிரீடம் அணிந்த தலையை) கொடுமை வாய்ந்த அம்பினாற் கொய்த தங்க சொரூபனான சிவனுக்கு. தொடர்ச்சி. பழுத்த கொற்றவேற் படைமிகு விரைவினாற் பாய்ந்த வழித்த லத்திடை வந்ததோர் மாசறு தீர்த்தம் (34) இவ் வண்ணம் வயலூரிலும் முருகவேள் தீர்த்தங் கண்டதாக ஐதிகம் இருப்பதால் இப் பாடலிற் குறிக்கப்படுவது வயலூர்த் தடாகமே. சத்தி தீர்த்தம் எனப்படும் இந்தத் தீர்த்தத்தின் பெயரே வேலால் தோன்றியது என்பதை விளக்கும்; இதன் நீர் பளிங்கு போன்றது. அதனால் 'கண்ணாடியில் தடம் என இந்தப் பாடலிலும், ஒத்த நிலாவீசு நித்தில நீராவி.....வயலுாரா - எனத் திருப்புக்கொளியூர்த் திருப்புகழிலும் (950) அருணகிரியர்ர் இந்தத் தீர்த்தத்தைப் புகழ்ந்துள்ளார். 0 தக்கனை வீட்டியது - பாடல் 390-பக்கம் 484 குறிப்பு.

    • தங்கரூபன் - சிவன்:- 'பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி.ஈசனுக்கே" - பொன்வண்ணத் தந்தாதி 1.