பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர்| திருப்புகழ் உரை 657 திருஅருள் பாலிப்பதிற் புகழ் பொய்ம்மையுறாத கணபதியும் (பொய்யாக் கணபதி" என்னும் பெயருடைய விநாயகப் பெருமானும்), அழகிய "அக்னிசுரர்" என்னும் திருநாமம் கொண்ட சிவபிரானும் வாழ்கின்ற வயலூரில் உள்ள அழகு நிறைந்த கோயிலுள் வீற்றிருக்கும் பெருமாளே! (இனி இடர் படுவேனோ) 911. பொறுமை யில்லாத (գ՞ri கெட்டவர்களும்) ஒழுங்கினர்களும், நிரம்பத் தருக்கம் பேசும் ஆடம்பரவாதி. களுமான (மனிதர்களால்) நான் களைப்பு (சோர்வு) உற்று மடியாமலும், மந்த்ரவாதம் செய்யும் மிக இழிவு நிலையில் உள்ள தாழ்மை வாய்ந்த சித்திரப் பேச்சு அலங்காரப் பேச்சு - பொய்ப் பேச்சுப் பேசிக் கொண்டாட்டம் போடுபவர்களின் செய்கைகளிற் சிக்கி மடியாமலும், மேற்கொண்டு ஒழுகும் (அவ்வச்) சமயங்களுக்கு உரிய ஆசார நியமங்களிற் கட்டுப் பாடுகளிற் பட்டு மடியாமலும், உருவ வழிபாடு செய்து நாள்தோறும் அன்பு வைத்துள்ளோர்கள் புரியும். சரியை, கிரியை, யோகம் எனப்படும் ஒழுக்கங்களை மேற்கொண்டு மடியாமலும், (நேரே) எவ்வித சஞ்சலங்களுக்கும் உட்படாத ஞானத்தை (நீ) வந்து எனக்குத் தந்தருளுக. போரில், கட்குடியரான (திதி புத்திரர்) அசுரர்களின் அறியாமையானது (உலகுக்குத்) துக்கத்தையே தர(அந்தத் துக்கம்) வளர்ச்சியுறாதவழிக்கு அந்தத் துக்கத்தை ஒழிக்க வருமளவிற் பன்னாள் அலமருதல் கண்ணுற்று அருளி....அறிவிற் காணரிய மெய்ஞ்ஞானக் கண் காட்டி" என வரும் கந்தர்கலி வெண்பாவாற் பெறப்படும். X ஆலோகம் - தெளிந்த அறிவு. ஆலோகம் என்பது அலோகம் என்பதன் விகாரம் எனக் கொண்டால் - அலோகம் - அறியாமை எனப் பொருள்படும். t" "ஆலோகந் தன்னை அகற்றுவித்து" -கந்தர் கலிவெண்பா (உ.வே.சா. குறிப்புரை) 20