உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 115 மலை நில ஊர் (வள்ளிமலையில்) - வாழ்ந்த பெண் ஒக்க வாழ்ந்தபெண் வள்ளியுடனே, வெற்றி வேலை ஏந்தி, கச்சித்தலத்தை (நத்தி.நத்தினவனே) விரும்பினவனே! நாள் (இளமை) கொண்ட பெருமாளே (என்றும் இளைய பெருமாளே)! (அல்லது) கச்சியை விரும்பி நாள்தோறும் பொலியும் (பொலிந்து வீற்றிருக்கும்) பெருமாளே! (விலைமாதர். மார்க்கம்-உழல்வேனோ) 492. தீம்பு வார்த்தைகள் சில நீங்காததும் கொள்ளை கொள்வது போன்றதுமான (சமயத்து) சமயவாதக் (கத்து கூச்சற் கடலொலியை எழுப்புவோருடைய வலிய கலைக் கூட்டத்தில் நின்றும் நீங்கி, மனத்தில் (யாதொரு) ஆசையும் இல்லாமல், (உனது) திருவருளாலே (தம்மைப் பற்றிய) யாம்' என்னும் நோக்கம் அற, (உன்னை) உணர்ந்து, உருகி, (உனது) அழகிய தாமரை போன்ற திருவடியைச் சேர்வார்தம்) சிந்திப்பவர்களுடைய குழாத்தினில் (கூட்டத்தினில்) என்னையும் அன்புடன் கூட்டிவைக்கச் சிறிதளவு (முருகா! உனது திருவுள்ளம்) நினைத்தலாகாதா! மிகப் பராக்ரமம் (வீ ரமும்), ஒளியும் கொண்ட வேல்கொண்டு ஒப்பற்ற கிரவுஞ்சமலை* பொடிபட மாமரமாய் நின்ற சூரனை. வென்ற அரசே! பன்னிரண்டு திண்ணிய புயங்களை உடையவனே! வெட்சிமாலை அணிந்த அழகிய லக்ஷ்மீகரம் பொருந்திய மார்பனே! வேலோன்" எனவரும் கந்தரலங்காரப் பாடலால் (100) அறிகின்றோம் அடியார் சிறப்பை-பாடல் 324 (பக்கம் 304 305 கீழ்க்குறிப்பைப் பார்க்க)

  • பொட்டாக வெற்பைப் பொருத கந்தா " - கந்தர் அலங்.34