பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலுர்) திருப்புகழ் உரை 671 பொருந்திய உலகங்கள் பதினான்கினும், அளவிடுதற்கு முடியாத எல்லை அளவுக்குத் (தனது) தாள்வீசு மாயன் திருவடியை நீட்டின (மாயன்) திருமாலின் மருமகனே! மநுநீதிக் சோழன் நீதியொடு ஆண்ட சோழநாடு சிறந்த நிலையை அடையும பொருட்டே மேலை வயலூர் என்னும் தலத்தில் வந்து வாழும் பெருமாளே! வாழும் தேவர்களுக்குப் பெருமாளே! (கழலு நீப வேல் வாகும் மறவேனே) 917. எண்ணெய் நெய்ப்பு கொண்டதும், சுருண்டுள்ளதுமான கூந்தலானது கருமணலோ, மேகமோ! தாமரை மலரின் நறுமணம் வீசும் நெற்றியானது வில்லோ, பிறைச் சந்திரனோ! நீண்ட இரு கண்களும் அம்போ, மானோ! இனிப்புடன் ஊறி. நெகிழ்ந்து வரும் வாயூறலாம் அமுதத்தைத் தரும் இதழ்வாய் கொவ்வைக் கனியோ, பவளமோ! பரிசுத்தமான கழுத்தானது சங்கோ, கமுகோ தாழாது நிற்கின்ற இள முலையானது குடமோ, மலையோ! அடியோடு தேய்ந்துபோய் இளைத்துள்ள இடையானது கொடியோ, உடுக்கையோ! சிறந்த அழகிய (அரை) அல்குலானது பாம்போ, தேரோ! இந்த அழகிய அடி யிரண்டும் மலரோ, தளிரோ! என்றெல்லாம் மோகம் கொண்டவனாய் காம இச்சையுடன் பெண்களுடனே (செப்ப) பேசுதற்கு வேண்டி, அந்த மயக்கமாகவே (அல்லது செப்பம் செவ்வையான - பூரணமான - மயக்கத்துடனே) (அவமே) வீணாகத் திரிகின்ற நான் ரத்னச் சிலம்பணிந்த உனது இரண்டு திருவடிகளையும் ஒருகாலும் மறக்க மாட்டேன்; புத்தர்கள், சமணர்கள், மிகவும் அழிவுற, தெற்கு (பாண்டி நாட்டு) அரசன் திருநீறு இட, இடப்பட்ட (அனல் வசம்) நெருப்பினிடையே நல்ல வண்ணம் ஏடு (எரிபடாது பச்சையாய்) ஊறு இலாது விளங்க, உமையம்மையின் "புக்க அனல் புனல் திரு ஏ டுயவே" என்றும் பாடம் பாடல் 500-அடி 5-ம் பார்க்க