பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர்| திருப்புகழ் உரை 673 பிள்ளையென்று சொல்லும்படி, இசைத்தமிழால் சொல்லப்பட்ட நூலை, வேதம் அனைய நூலை உணர்ந்து (திருநெறித் தமிழ் என்கின்ற தேவாரத்தை) ஒதிய தவமுனியே! பிரமாபுரம் என்று பேருள்ள சீகாழியில் வாழ்ந்த அழகனே! கவுணியர் குலத்துப் பெருமான் என்னும் திருவுருவத்துடனே வந்தவனே! = - (சத்தம்) சக்தம் சக்தி வாய்ந்த ஆறுமுகனே, குகனே! (வெற்பில் அயிலா! எறிசுடர் அயிலா) மலைகளில் வீற்றிருக்கும். வேலனே! சுடர் எறி அயிலா - ஒளிவீசும் வேலாயுதனே! அல்லது வெற்பில் - எறிசுடர் அயிலர் - (கிரெள்ஞ்ச) மன்லமீது, விட்ட ஒளிவேலனே! மயில்வாகனனே! சக்திவாய்ந்த கணபதிக்குத் தம்பியே! (உளையாய்) என்றும் எங்கும் உள்ளவனே (அல்லது அழிதல் இல்லாதவனே) . ஒளி மிக வீசும் சக்ராயுதத்தை ஏந்திய திருமாலின் மருகனே! முருகனே! உக்ர மூர்த்தியாகிய இறைவன்-சிவன து-புதல்வனே! முதல்வனே! குளிர்ச்சி பொருந்திய (தடம்) நீர் நிலைகள் உள்ள வயலூரில் தகுதியுடன் வீற்றிருக்கும் பெருமாளே! (இருகால் ஒருகால் மறவேனே) 918. கொங்கையை மறைக்கவும், ஒரு வாசற்படியருகில் தலை மறையும்படி நிற்கவும், ஆசை கொண்டுள்ளார் போல புன்னகை என்கின்ற ஒரு சிறிய தூதை அனுப்பவும், முகத்துடனே முகத்தை (வைத்து) அழுத்தவும், ஆசை மொழிகளைப் பேசவும், நகங்கொண்டு அழுத்தவும், காம ல்லையிற் பொருந்துமாறு மாமா, அத்தான் என உறவு முறை கூறி மயக்கவும், நறுமணம் உலவும் மலர்ப் படுக்கையின் மேலே. ஆடையை நெகிழ்ச்சியுறச் செய்தும், இளைஞர்களாயுள்ளோர்களின் உடலானது (சளப்பட) துன்ப்ப்படும்படி, நாள்போக வரவரக் (கறை அழிக்கவும்) அவர்களது . ரத்தத்தைக் கெடச்செய நானுள்ளேன் என்பது போல (அண்ணி) சார்ந்து நெருங்கி (எனக்குத் தரவேண்டிய) பொருள் இதுவே.