பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 117 ஏகாம்பரர் என்னும் பெயரினராய் (விளங்குபவரது) பாம்புகள் நிலைத்திருக்கின்ற (அல்லது ஏகாம்பரர் ஆய்ப்பணி - ஆய்ந்து அணிந்துள்ள பாம்புகள் பொருந்தி. யிருக்கின்ற) புயத்தைப் பெறும் பொருட்டு (அல்லது-இறைவன் (கம்பராய்) ஏகாம்பரராய், வெளிப்பட்டுத் தோன்றி (பணிமன்னு புயம்) - தொண்டு (நிலைத்திருக்கும் புயத்தை - அவர்க்குப் பூசை செய்யும் தனது புயத்தை - அவர்க்குப் பெறுவதற்குகாக இறைவன் தனது புயத்தைப்பெற-இறைவன் தன்னை மணக்க-கற்புநிலை தவறாமல். கம்பை யாற்றங்கரையில் (அன்னை) தாய் (பார்வதி) தவஞ் செய்திருந்த கச்சியில் அழகிய பெருமாளே! (கழல்சேர்வார் குழாத்தினில் வைக்கச் சற்றுக் கருதாதோ) 493. அப்பிடை வாய்ந்து நீடு குலாவிய பதுமாதியை நீரினில் பொருந்தி நெடுநேரம் விளங்கின தாமரையாகிய முதன்மையான மலரை-நீந்தி (தனது அழகால்) கடந்து மேம்பட்டு, உற்பல ஒடையில் மீதினில் ஊர்ந்து (நீலோற்பல ஒடையில் மேலே பரந்து விளங்கி ஒடையில் உள்ள நீலோற்பலம் போல வெளித்தோன்றி விளங்கி - நெடுந்துாரம் பாயவல்ல சேல்மீனை நேரொத்து (சேல்மீன்போல நீண்டு), அம்புக்குப் போட்டியாகி எதிர்த்து, மை (அஞ்சனம்) மிகப் பூசப்பட்டு அதைத் தாங்குவதாகி, ரேகைகள் பொருந்த வை (கூர்மை) கொண்டு, (காதில் உள்ள) குழையோடு ஊசலாடிய கண்களாலே (என் ங்கம்) சாய்ந்து-தளர்ந்து, பனங்கள்ளை உண்டவர் லாகிரி கொண்டதுபோல, மயங்கிச் சிறிது ஆராய்ந்து, (பாணினார்) இசைபாடும் பொதுமகளிருடைய இரண்டு பாதங்களிலும் வீழந்து, (இப்படி) இந்தப் பூமியின் மீது அற்ப அறிவு காரணமாக