பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலுர்) திருப்புகழ் உரை 683 தேவர்கள் (கடைந்தெடுத்த) அமுதம் எனவும், (மது) தேன் எனவும், அறுசுவையும் அளவற்ற வகையிற் கூடியதெனவும், இலவமலர் ஒத்த செவ்விதழை (வாயூறலை) (முறை முறை) பலமுறை அல்லது முறைப்படி அனுபவித்து மகிழ்ந்து நகக் குறிகளை வைத்து பற்குறி வரையும் முறையே குறிகளை வைத்து, முநிவர்களும் தமது மனத்திண்மை கரைந்து குலையுமாறு (அரிசனம்) மஞ்சள் பூசப்பட்ட இடங்களைத் தொட்டும், பிரியமாய் அணிந்துள்ள ஆடையைத் தொட்டுக் கலைத்தும், நெற்றியில் உள்ள பொட்டை அழியச் செய்தும், செருக்கு அல்லது மகிழ்ச்சி கொண்ட கண்கள் காதிலுள்ள குழைகள் வரையும் எட்டி முட்ட நிலாப்போன்ற முகத்தில் வெயர்வு உண்டாக, மொழிகள் பதறிப் பதறி வர, ரதிபதி) ரதியின் கணவன் - மன்மதனுடைய - சாத்திர வழியிலே (கொக்கோக சாத்திரத்திற் கூறியவாறு) கற்றுள்ள புட்குரல்களைக் (கண்டத்தில்) கழுத்திற் பயில்வித்து, மடுப்போன்ற (நீர் நிலைப்பள்ளம் போன்ற) கொப்பூழில் முழுகிப். புகடு - புகட்டப்பட்ட செய்யப்பட்ட பலவிதமான கலவித் தொழில்களைப் பொருந்திய முறைகளில் (கரு) மேகம் என்றும், இருள் என்றும், காடு என்றும் ஒப்புமை கூறப்பட்டதும், நெய்ப்பு பளபளப்பு உள்ளதும். பல பூக்களை அணிந்துள்ளதுமான கூந்தல் சரிந்து விழ, அந்த (அமுத நிலை) இன்பகரமான நிலையை மலரன்ன அடி முதல் முடிவரையும் குமுதபதி கலை) சந்த்ரகலையில் குறை கலை முதல் நிறைகலை வரையும் - கிருஷ்ணபசுஷம் தல் சுக்லபகஷம் முடிய (எப்போதும் என்றபடி), மனத்திலே அழுத்தி, அனுவர்க்கத்து உருக்கி (அந்தச் சிற்றின்ப வழியையே) அனுசரித்து அனுட்டித்து அதிலேயே மனம் உருகி, ஒரு பொழுது கூட அந்த வழியை விட்டு விலகுதல் அரிதென்னும்படியான அனுபவமானது அடியோடு நீங்குதல் இல்லாமற் பொருந்திய (கல்வி) புணர்ச்சியில் (இதத்துப் பிரியப்பட) இன்பகரமாய் ஆசையுடனே (நடித்து) ஆட்டம் ஆடி அந்தத் (துவட்சியினில்) சோர்வினில் மனம் நைந்து வாட்ட மடையச்.