பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

730 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ராஜபுரம். (இது சேலம் (சூரமங்கலம்) ரெயில்வே ஸ்டேஷனி லிருந்து 20 மைல். இங்கு ஸ்வாமி இருதேவிமார் சமேதராய் ஆறு திருமுகங்களுடன் வீற்றிருக்கின்றார்.இத்தலத்துக்கு மேற்கு 3-மைலிற்கொங்கணகிரி' இருக்கின்றது.) H. 939. நரஸ்துதி வேண்டாம் தந்த தானன தத்தன, தந்த தானன தத்தன தந்த தானன தத்தன தனதான சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை "கத்திகை தண்டு மாகரி பெற்றவன் வெகுகோடிச். சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதிச துர்க்கவி சண்ட மாருத மற்றுள கவிராஜப்: t பங்கி பாலச ரச்வதி சங்க நூல்கள்வி தித்தப்ர பந்த போதமு ரைத்திடு புலவோன்யான். பண்டை மூவெழு வர்க்கெதிர் கண்ட நீயுமெ ணச்சில X பஞ்ச பாதக ரைப்புகழ் செயலாமோ O வெங்கை யானை வனத்திடை துங்க மாமுத லைக்குவெ ருண்டு மூலமெ னக்கரு டனிலேறி.

  • கத்திகை - விருதுக்கொடி t கவிராஜ பங்கி = கவிராஜன் என்னும் பட்டத்தைத் தனக்கு உரிய பங்காகத் - தனக்கே உரிமையாகக் - கொண்டவன்.
  1. அருணகிரியார் காலத்தில் புலவர்கள் இவ்வாறு விருதுகளுடன் உலவினர் போலும் - பாடல் 80அடி பார்க்க அவர் காலத்தில் இருந்த வில்லிபுத்துாரர் என்னும் பெரும் புலவர் போலிப் புலவர்களைக் கண்டித்தன ரென்பதும் பின் வரும் பாடலால் தெரிகின்றது.

"குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியனிங் கில்லை. குறும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட் டறுப்பதற்கோ வில்லையில்லை, இரண்டொன்றா முடிந்து தலை யிறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்தனில்லை, விளையாட்டாக் கவிதைதனை விரைந்து பாடித் தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகளுண்டு, தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே" (தனிப்பாடல்).

  1. மூவெழுவர் - தலை யிடை கடைப்படு 21.வள்ளல்கள்.

- பாடல் 304-பக்கம் 255 கீழ்க்குறிப்பு. X பஞ்சமா பாதகங்கள்:- பாடல் 79 முதலடி (தொடர்ச்சி 731 ஆம் பக்கம் பார்க்க