பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜபுரம்) திருப்புகழ் உரை 731 ராஜபுரம் 939. தன்னுடைய விருதை (வெற்றிச் சின்னத்தை) எடுத்து ஒதும் சங்கமென்ன, நீண்ட கிரீடம் என்ன, பொன்னாலாய வீரக் கழல் என்ன, மேலெழுந்து விளங்கும் சாமரங்கள் என்ன, விருதுக்கொடி என்ன, (தண்டு) சிவிகை - பல்லக்கு என்ன, மா குதிரை என்ன, கரி-யானை என்ன இவையெலாம் கொண்டவன், பல கோடிக் கணக்கான அழகிய பாஷைகளைக் கற்றவன், மந்த்ரவாதத்தில் வல்லவன், (ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனப்படும்) நான்கு வகைக் கவிகளிலும் வல்லவன், சண்டமாருதம் - கொடுங்காற்றுப் போலப் பேச வல்லவன், மற்று பட்டப் பேர்களாக உள்ள கவிராஜ பங்கி' 'பால சரஸ்வதி' என்னும் பட்டங்களைக் கொண்டவன், சங்க நூல்களிற் சொல்லப்பட்டுள்ள பிரபந்த அறிவு உரைகளை எடுத்து ஒதவல்ல புலவன் நான் பழைய தலை, இடை, கடை எனப்படும்_(மூ ஏழு 21) வள்ளல்களுக்கு ஒப்பான்வன் நீ -என்றெல்லாம் சில ஐம்பெரும் பாதகங்களைச் செய்தவரைப் புகழ்கின்ற செயல் நன்றா (அங்ங்ணம் புகழும் செயல் ஒழிவதாக் என்றபடி) (வெம்) விரும்புத்தக்க துதிக்கையை உடைய யானை) கஜேந்திரன். (வன்த்திடை ஜலத்தினிடையே உயர்ந்த பெரிய முத்ல்ை வாய்ப்பட்டு மருட்சியுற்று (பயந்து மூலமே எனl என்று கூச்சலிட்டபோது, க்ருடன்மேல் ஏறி. O வனத்திடை - ஜலத்தினிடத்தில் கஜேந்திரன் வரலாறு - பாடல் 110-பக்கம் 262 கிழ்க்குறிப்பு. இந்திரத்யும்நன் என்னும் அரசன் விஷ்ணு பூஜை செய்கையில் அகத்தியர் வர, அரசன் கருத்தைப் பூசையில் இருத்தி வைத்த காரணத்தால் அவர் வருகையை உணராதிருக்க, அவர் தம்மைக் கவனிக்கவில்லை என்று நினைத்து நீ யானையாகக் கடவை என அரசனைச் சபித்தனர். யானையான பின்னும் விஷ்ணு பூஜையை அந்த யானை விடாது செய்து வந்தது. ஒரு நாள் தாமரைத் தடாகத்திற் பூப் பறிப்பதற்கு அந்த யானை இறங்கின பொழுது, தேவலன் என்னும் முனிவர் நீர் நிலையில் நின்று தவஞ் செய்தவரின் காலை ஹ-ஹ' என்னும் கந்தருவன் இழுத்த (தொடர்ச்சி 732 ஆம் பக்கம் பார்க்க)