பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1296

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கை (காங்கேயம்) திருப்புகழ் உரை -- 737

  (விலை தரும் கொலை) கொலைதரும் வில்லை கொலை செய்யும் வில்லைக் கொண்டு போர் புரியும் வேடர்கள் (கோவென) கோ என்று பேரொலியிட்டுக் கூவி நெருங்க, (அதைக் கண்டு வருந்திய வள்ளியை நோக்கி) "வருந்துகின்ற அழகிய குறப்பாவையே! நீ வருத்தத்தைக் (கவலையை) விடு, விடு" என்று கூறிக் கையிலிருந்த கூரிய வேலாயுதத்தைச் செலுத்தின இளையோனே!
  வீரம் வாய்ந்த வண்டுகள் நல்ல முயற்சியுடன் தேசி" ராகத்தைப் பாடிடும் நறுமணம் கொண்ட தாமரைப் பூக்களைக் கொண்ட நீர் நிலைகள் உள்ள விஜயமங்கலத்தில்’ வீற்றிருக்கும் பெருமாளே! தேவாதி தேவர்களுக்குப் பெருமாளே!

(சீர்பாதம் நாணினி மறவேனே)

        சிங்கை (காங்கேயம்) 
             941.
  (சஞ்சரி) சஞ்சரீகம் - வண்டு மகிழ்ந்து நின்று ரீங்காரம் செய்யும் குளிர்ச்சி பொருந்திய குவளைமலர் விளங்கும் கூந்தல் மூலமாகவும்-
  குளிர்ந்த முத்து (மாலை), (தங்கம்) பொன் மாலை உடலில் அணிந்துள்ள (சண்டம்) வலிமை கொண்ட குடம் போன்ற மலையாம் கொங்கை மூலமாகவும்
  விஷம் கொண்ட செயலைப் பொருந்தி நீயே தஞ்சம் என்று (வெளி வேஷத்துடன்) - வந்து நம்பிவிட - வந்து என்னை நம்பி நிற்க (அல்லது, நான் நம்பும்படி வர), அந்த மாதுடனே ஆசை.
  நட்புவைக்கின்ற என்னைக் (காத்தருள) - இன்றே , இந்நாளே (நன்று இல் வினை) தீயவின்ைகளை அழித்து (என்னுடைய யவினைகளை இந்நாளே அழித்து) நன்மைதரும் மயிலிற் பொருந்தி வரவேனும்,
  தாமரை மலர், கொன்றை மலர்,தும்பை மலர், மகிழம்பூ இவைகள் நிறைந்து நறுமணம் கமழும் திருவடியை உடையவனே!