பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா) திருப்புகழ் உரை 123 495. மையூசியுள்ள வேல்போன்ற கண் கொண்டு அழைக்கவும், இன்புகரம்ாகச் சிரித்து மனத்தை உருக்குதல் செய்யவும். ஆதி: மேகம்போன்ற கூந்தலைக் கல்ைக்கவும் நகக்குறி (யிட்டு) அழகிய (கைம் மூலத்தை' அக்குளை (கமுக்கட்டை)த் தெரியும்ப்டிக் காட்டவும், மந்தர் மலை போன்ற கொங்கையைச் சிறிது அசைக்கவும், புடைவையை அனாவசியமாக அவிழ்த்து உடுக்கவும், இளைஞர்களுடைய நெஞ்சிலே ஆசைத் தீயை எழுப்பவும், வீண் வார்த்தைகளைப் பேசி, அவர்கள் மனதைக் கவர்ந்து வசப்படுத்தவும், அரங்கில் (சபையில்) நடனம் செய்து மருட்சி (காமமயக்கைக்) கொடுக்கவும், யாராயிருந்தபோதிலும். நிந்தை செய்யாமல் (இகழ்ச்சி செய்யாமல்) (இவர் இழிந்தவர் என ஒதுக்காது பொருள் பறிப்பதே தமது குறியாக வைத்துக்கொண்டு பொருளைப் பறிக்கவும், இங்கு வல்லவர்களாயுள்ள (பொதுமகளிரின்) கையில் அகப்பட்டுக் கொண்ட கட்டு நீங்க, உனது பாதசேவையை நீ தந்து அநுக்கிரகம் செய்யும் ஒரு நாளும் உண்டோ (அநுக்கிரகம் செய்யும் ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா!) யானையின் த்தைக்கொண்ட விக்ன விநா யகன் என்ம்ை ரபு ೧SíÏ), அங்குசம், பாசம் இரண்டும் கையிற்கொண்ட பிரசித்திபெற்றவன், ற்றைக் கொம்பன், பெருவயிறன், முக்கண்ணன், பராக்ரமம் நிறைந்த கணபதி (கணங்களுக்கு அரசன்). "ஆணவவெங் கரிபிணித் தடக்கிக் கரிசினேற்கு இரு கையும் ஆக்கும் அண்ணலை" தணிகைப் புராணம். 'மும்மை நாட்டம் நால்வாய்ப் பாசம் அங்குசம் தேசுறும் எயிறு" சங்கற்ப நிராகரணம் (1) "கங்கையும் பணிவெண் திங்களும் விரைத்த கடுக்கையந் தொங்கலும் அரவும், தங்குபொற் சடையும் முக்கனுந் தாதை தாணு என்றுணர்த்த மென்மலர்க் கை, அங்குச பாசம் அணிந்து வெற்புயிர்த்த ஆரணங்கு அன்னை யென் றுணர்த்தி, வெங்கலி முழுதும் துமித்தருள் பட்டிவி நாயகன் சேவடி பணிவாம்" பேரூர்ப் புராணம்.