பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகன்பூண்டி) திருப்புகழ் உரை 749 வெங்கை விரும்பத்தக்க ஒழுக்கத்தைக் கொண்ட அல்லது (வெம்) பராக்ரமம் பொருந்திய (கை) ஆற்றலை உடைய சுக்ரீவருடைய (வானர) சேனையை இலங்கைக்கு (கடல் கடந்து) போகும்படி விட வல்லவனும், ஜயத்தையே தரு சக்கரத்தை ஏந்தினவனுமான பெருமானாம் திரும்ால் மனம் மிக் மகிழும் மருகனே! == வெள்ளைப்பட்டு அணிந்துளது போல நல்ல. (வனம்) அழகிய (கமுகமரம்) பாக்குமரங்கள் (எண்பட்டு) மதிக்கத்தக்க வகையில் பாளைகளை விரிக்கின்ற சோலைகள் மிக்குச் சூழ்வதால் வெயில் மறை படுகின்ற வயலூரில் வீற்றிருப்பவனே! உன் கொங்கைக்கு ஒப்பாவது, (வடகிரி) மேருமலையே என்றும், உன் செங்கைக்கு (செவ்விய கைக்கு) நிகராவது நறுமணத் தாமரையே என்றும், உன் கூந்தலுக்கு யாவது (கரு) மேகமே என்றும் (வள்ளிமலைக்) காட்டிலிருந்த மங்கிை. வள்ளியைக் கும்பிட்டு வணங்கி ஆசையுடன்_கொஞ்சிப் பேசி இனிய சொற்களைக் கொண்டு (அந்த வள்ளியைப் பாடிப் பர்வின இளையவனே! கொங்கு நாட்டுப் பட்டாலி நகரில் வீற்றிருக்கும் பெருமாளே! (வம்பிற் சுற்றாது பரகதி அருள்வாயே) திருமுருகன் பூண்டி 946. (உன்னைப் புணிவது இன்றியமையாததென உணர்ந்து) அவசியமென அறிந்து, உன்னைப் பணிந்து (வேண்டிப் பலகாலும்) பலகாலும் வேண்டி - பல முறையும் பிரார்த்தித்து தொடர்ச்சி: ** "சுந்தரர்க்குப் பறித்த பொருள்கள் அனைத்தினையும் பரிசு கொடுக்கும் பரமர்திரு. முருகன் ಆಸ್ತ್- யினிதுறையும் முருகா தாலோ தாலேலோ" (கூேடித்திரக் கோவைப் பிள்ளைத் தமிழ்) திருமுருகன் பூண்டி கொங்கு மணட்லத்தைச் சார்ந்தது: "சுந்தரர் சொற்றமிழ்க்கா, அனத்தின் நடையுடை யாள்பாகன் தென்முரு காபுரிசூழ், வனத்தில் அடித்துப் பறித்ததுவுங் கொங்கு மண்டலமே" - கொங்கு மண்டல சதகம்-15, 11. உன் வேண்டி - உன்னை வேண்டி