பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவிநாசி) திருப்புகழ் உரை 757 பொருள் கனத்த பொருள் செறிந்த செந்தமிழால் உன்னையே தினந்தோறும் நினைக்கவும் (தருவாய் உனதாரருள்) உன்னுடைய் நிறைந்த திருவருளைத் தந்தருள வேண்டும் (கருத்திருந் துறைவாய் என தாருயிர் துணையாக) என்னுடைய அருமை உயிர்க்குத் துணையாக நீ என்க்ருத்திலேயே ப்ொருந்தி வீற்றிருந்தருளவும் வேண்டும்; கடல் நீரிலே ஒளித்திருந்த சூரனுடைய உடலைப் பிரிவு செய்ய அது இரண்டு கூறாகத் தோன்றி எழுந்து ஒப்பற்ற சேவலும் அழகிய மயிலும் ஆகும்படி செலுத்திய வேலாயுதத்தை உடையவனே! (அனத்தனும்) அன்னவாகனமேறும் பிரமனும், (கமலாலயமிதுறை) செந்தாமரைக் கோயிலின்மீது வீற்றிருக்கும் (திரு இலக்குமி சேர்ந்துள்ள திருமாலும், ஆக இருவரும் அடி (முடி) தேடிய (அரற்கு) சிவபெருமானுக்கு அரிய பொருளை விளக்கி உபதேசித்த குமரேசனே! அற நெறியை உபதேசிப்பவரும் (தருமோபதேசம் செய்பவரும்) பெருமை பொருந்திய அந்தணர்களும் உன்னை நாள்தோறும் தொழுபவர்களாய் (அமராய்புரி) அமர்ந்திருத்தலை விரும்பியுள்ள(அவிநாசியுள் மேவிய பெருமாளே)! திருவருள் நிறைந்து (அடியார்களுக்கு அருள் நிறையப் பாலித்து) அவிநாசி யென்னுந் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. (மயில் மீதினில் வரவேணும்) (தொடர்ச்சி): முருகவேளின் குழந்தைத் திருவிளையாடல்களைக் கூறுமிடத்து அவர் " செந்தமிழ் வடாதுகலை சேர்ந்துழி உலாவும்" என்றார் கந்தபுராணத்தில் 1-14-5. t நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் - சுந்தரர் 7-1-1. 4 சூரன் இரு கூறானது: போராவுணன் அங்கம் இருகூறாய் அடல் மயிலும் சேவலுமாய்த் துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும்" . கந்தர் கலிவெண்பா திருப்புகழ் 737-பக்கம் 204 கீழ்க்குறிப்பு x அயனும் அரியும் சிவபிரானது அடிமுடி தேடினது: - பாடல் 319-பக்கம் 292-கீழ்க்குறிப்பு. o சிவனுக்கு உபதேசித்தது - பாடல் 327-பக்கம் 314-கீழ்க்குறிப்பு. ** அமராய்புரி - அமர்தலை உடையராய், புரி - புரிதல். - அமர் - அமர்தல் - முதனிலைத் தொழிற் பெயர்